– தூரிகா
வாய்ப்புகளை பயன்படுத்துகிறவர்கள் சாமர்த்தியசாலிகள். வாய்ப்புகளை உருவாக்குபவர்கள் சாதனையாளர்கள். மெத்த படித்த மருத்துவர்களும் அந்த குழந்தை உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்று மறுத்தபோது தன் நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் மருத்துவரின் முடிவை தோற்கடித்து தான் உயிர்
வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கி கொண்டவள் ஏமி பெர்கியூஷன். லண்டனைச் சேர்ந்த இந்த குட்டிக் குழந்தைதான் இந்த மாத சின்னவர் ஆனால் பெரியவர் பகுதியின் நாயகி.
2006ஆம் ஆண்டுதான் ஏமிக்கு இதய கோளாறு இருப்பது முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. ஏமியின் இரண்டு வயதில் அவள் இதயம் செயலற்றுப் போயிருந்தது. உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சையை அவள் உடல் ஏற்க மறுத்தது. இதைக் கண்டறிந்த அடுத்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பாள் என கணிக்கப்பட்ட குழந்தை ஏமி. “ஆனால் செயலற்று போனது இதயம் தானே தவிர மனம் அல்ல என மனம் தளராமல் புன்னகையோடு அறுவை சிகிச்சை எதிர் கொண்டு உற்சாகமாக சிரிக்கும் ஏமிக்கு தற்போது வயது ஆறு”.
ஆறு வயதிற்குள் மூன்று முறை இதயமாற்று சிகிச்சை செய்யப்பட்ட ஏமி அடுத்த வாரம் அவள் பள்ளியில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறும் முனைப்போடு பயிற்சி பெற்று வருகிறாள்.
மிக அதிக தன்மை கொண்ட மருந்துகள், உடலெங்கும் இயந்திரங்கள் வால்வுகள் என அனைத்தையும் கடந்து, ஒன்பது மணி நேரம் போராட்டத்திற்கு பின் மூன்றாம் இதயத்தில் உயிர் வாழும் சாதனைப் பெண் ஏமி.
உபாதைகள் கடந்து உற்சாக சிரிப்புடன் வலம் வரும் ஏமி, நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!
Leave a Reply