நமது நம்பிக்கை இதழை தொடர்ந்து படித்து வருகிறோம். ஊட்டச்சத்துக்கள் மிக்க பானங்களை பருகுவது போல் ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையான கருத்துக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளும் நம்மை படிக்கத்
தூண்டிவிடுகின்றன. நல்லதொரு புத்தகம் ஆசிரியரின் “தீயாய் எழுந்தால்” கவிதை எங்கள் மிகவும் கவர்ந்துள்ளது.
ஸ்ரீதேவி, திருப்பூர்.
வெற்றி வாசல் 2009-ல் திரு.கோபிநாத் அவரது உரையில் “சாதிப்பது பெருமையல்ல நம் கடமை” என்று தொடங்கி பலப் பல விஷயங்களை எட்டினால் பிடித்திடலாம் என்னும் தலைப்பில் கூறியிருப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
கோபால், மதுரை.
ஜுன் இதழில் வெளியான ஆசிரியரின் ‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’ தொடர் மிகவும் சிறந்த கருத்துக்களை தாங்கி வருகிறது. இவரது கவிதை வரிகள் எழுச்சியும், விழிப்புணர்வையும் தருகிறது. ஆசிரியரின் இந்த உயரிய படைப்புக்கு பாராட்டுக்கள்.
சூர்யா, மானாமதுரை
‘கான்ஃபிடன்ஸ் கார்னர்’ போன்று இதழின் ஒவ்வொரு பக்கமும் போற்றி பாதுகாக்க வேண்டிய பெட்டகமாக உள்ளது, குட்டிச் செய்திகளில் எவ்வளவு அர்த்தமுள்ள வாசகங்கள் அவை என்னை எப்போதும் உற்சாகமூட்டுகின்றன.
சிவக்குமார், திருச்சி.
சென்ற இதழில் “வீட்டுக்குள் வெற்றி” தொடரில் கிருஷ்ணவரதராஜன் பெற்றோரில் நீங்கள் எந்த வகை என்னும் கட்டுரையில் 5 வகையான பெற்றோரின் வகைகளை கூறியது எங்கள் நாங்களே உணர்வதற்கான வழிகளாக இருந்தது. குழந்தைகளிடம் பழகும் வழிமுறைகளையும் நன்கு அறிந்து உணர்ந்தோம்,
ஸ்வேதா, சென்னை.
Leave a Reply