விடுதலைப் போராட்ட காலத்தில், மூன்று முக்கியத் தலைவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மக்கள் மத்தியில் தம் கருத்துக்களைச் சொல்ல பத்திரிகை தொடங்கலாம் என்று பேச்சு வந்தபோது, ஒருவர் சொன்னார், “நம் நாடு மொழிவாரியாக பல
மாநிலங்களைக் கொண்டது. நம் கருத்துக்கள் மக்களைப் பெருவாரியாய் சென்றடைய வேண்டுமென்றால் ஒரே நேரத்தில் 27 மொழிகளில் பத்திரிகைகள் தொடங்க வேண்டும். இது சாத்தியமா என்றெல்லாம் தயங்காதீர்கள். தொலை நோக்கோடு சிந்தியுங்கள்” என்று. இன்று ஒரே நிறுவனம், பல மொழிகளில் தொலைக்காட்சிகள் தொடங்கி நடத்துவதைப் பார்க்கையில் அந்த தீர்க்க தரிசனம் வியப்பூட்டுகிறது. அந்தத் தலைவர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. உடனிருந்தோர், அரவிந்தரும், மகாகவி பாரதியும்.
Leave a Reply