அவர் பிரதமராக இருந்த போது லிஃப்டில் வந்தார். திடீரென்று லிஃப்ட் பழுதாகி நின்றது. 20 நிமிடங்கள் போராடி லிஃப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் யாரையும் கடிந்து கொள்ளவில்லை. அதிகாரிகளை அழைத்து ஓர் ஆலோசனை சொன்னார். “லிஃப்டில்
சிறியதாய் ஒரு நூலகம் அமைத்து, சில புத்தகங்களை வையுங்கள். இது போன்ற நேரங்களைப் பயனுள்ளதாக ஆக்கலாம். புத்தகங்களையும், பூக்களையும் பிள்ளைகளையும் பெரிதும் நேசித்த பண்டிதர் ஜவஹர்லால் நேருதான் அவர். தன் ஓய்வுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலிருந்து கொஞ்சம் நேரத்தைத் திருடி, புத்தகங்களைப் படிப்பதாகச் சொன்னவரும் இவரே!
Leave a Reply