நீண்ட தூரப் பயணத்தை அந்த இளவரசன் மேற் கொள்ள முனைந்தான். உடன் எடுத்துச் செல்ல படுக்கைகள், உணவு வகைகள், காலணிகள் என்று பலவற்றையும் அரண்மனை சேவர்கர்கள் ஆயத்தம் செய்தார்கள். முக்கியமாக எதையாவது கொண்டு செல்ல வேண்டுமா என்று அரசராகிய தந்தையிடம்
வினவினான் இளவரசன். அவன் ஏற்கெனவே எடுத்து வைத்த பொருட்களின் பட்டியலையும் நீட்டினான். அந்தப் பட்டியலைத் தொட்டுக்கூடப் பார்க்காமல் அரசர் சொன்னார், “வெறுக்காத இதயம், வாடாத புன்னகை, புண்படுத்தாத வார்த்தைகள் – இவை மூன்றையும் மறவாமல் எடுத்துச் செல்”
மனித நேயமே மகத்துவம்
இனிய சொற்களே தத்துவம்
Leave a Reply