பலம் பொருந்திய சிறுவன் ஒருவன், பலமில்லாதவனை பகையாய் நினைத்தான். வீணாய் அவனை வம்புக்கு இழுத்தான். இருவருக்கும் நடுவே எல்லைக்கோட்டை வரைந்தான், பலமில்லாத சிறுவன். முரட்டுச் சிறுவனை கண்ணுக்குக்கண் பார்த்து, ‘எல்லைக் கோட்டைத் தாண்டிவா. பார்க்கலாம்” என்று சவால் விட்டான். ஏனளமாய்ச்
சிரித்த முரட்டுச்சிறுவன் ஒரே எட்டில் தாண்டினான். அவன் கைகளைப் பற்றி, பலமில்லாத சிறுவன் பிரியமாய்ச் சொன்னான், ” இருவரும் ஒரு கோட்டின் ஒரே பக்கத்துக்குள் இருக்கிறோம். நண்பர்களாகி விட்டோம்” என்று.
நீயா? நானா? விரிசல் வளர்க்கும்.
நீயும் – நானும் – பிரியம் வளர்க்கும்!
vignesh
very good! every one should read and follow the theme……..