இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?
***
சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி
தோல்வி எப்போது வெற்றியாக மாறுகிறது?
தோல்வி கண்டவிடத்து துவண்டு விடாமல் தோல்வியல்ல
முயற்சிக் குறைவு எனக் கருதி முயற்சியை மேலும் தீவிரமாக்க வேண்டும் என்ற எண்ணம் எழும்போதே தோல்வி வெற்றியாக மாறுகிறது.
திரு.அ.சம்பத், கோவை.
எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி உடனே கிடைப்பதில்லை. அந்த முயற்சியை தோல்வி என்றே மனதுக்கு கொண்டு வரக்கூடாது. இன்னும் எப்படி சிறப்பாக்க வேண்டும் என்பதை தோல்வியின் செயல்பாட்டை அங்குலம், அங்குலமாக ஆராய வேண்டும். வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என்பதையும் துல்லியமாக மதிப்பிட வேண்டும். தோல்வியை வெற்றியின் ஆரம்பம் என்றே மனதுக்குள் ஓட விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு எப்பொழுதும் தோல்வி நம்பக்கம் எட்டிக்கூட பார்க்காது.
திரு.தங்க. பரமேஸ்வரன், திட்டக்குடி.
Leave a Reply