இதழ் வழியே SMS

மனிதர்களால்,
20 நாட்கள் உணவில்லாமலும்,
மூன்று நாட்கள் நீர் அருந்தாமலும்
ஐந்து நிமிடம் சுவாசிக்காமலும் வாழ முடியும்.
ஆனால் ஒரு நொடிகூட
நம்பிக்கையில்லாமல் வாழமுடியாது.

வாழ்வின் நிகரில்லா உண்மை:

வெற்றி – அந்தரங்கத்தில் நம்மைத் தழுவும்.
தோல்வி – அரங்கில் நம்மை அறையும்.

இருளில் துவங்கும் இரவுகள்
ஒளியின் வெளிச்சத்தில்தான் முடிகிறது.
கவலைகளோடு
உங்கள் பயணம் துவங்கினாலும்
இலக்கில் கவனம் இருந்தால்
உங்கள் பயணம் வெற்றியில் முடியும்.

யாராலும் தவறான தொடக்கங்களை
மாற்ற இயலாது.
ஆனால் யார் வேண்டுமானாலும்
வெற்றிகரமான முடிவுகளை
உருவாக்கலாம்.

சாணக்கியர் வரிகள்:
எதுவுமில்லாமல் பிறக்கிறோம்
பெயரோடு இறக்கிறோம்.
பெயர் வார்த்தையாக இல்லாமல்
வரலாறாக இருப்பதே
பிறப்பின் அர்த்தம்!!

பல நூறு மலர்கள் தேடிய பின்னரே
ஒரு துளித் தேனை சேமிக்கின்றன
தேனீக்கள்.
போராட்டங்களை கடந்தால்தான்
சுவைகள் நம் வசமாகும்.

பிறக்கும் போதே புகழ்படைத்தவராக
பிறப்பது விபத்து.
இறக்கும்போது புகழ்நிறைந்தவராக
மறைவதே சாதனை!!

வெற்றி என்பது நம் சொந்த நிழலைப் போல!
அதை பிடிக்க முயற்சித்தால் விலகும்.
நம் இலக்கை நோக்கி நடந்தால் அதுவாகவே பின் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *