கிருஷ்ணன் நம்பிதன்னுடைய திறனையும் தனித்தன்மையையும் ஓரளவாவது உணர்ந்தவர்கள் தங்களைக் குறித்து எவ்வித வியப்பும் கொள்ள மாட்டார்கள். இவ்வளவு சிறிய வேலைக்கே உலகம் தன்னைப் பாராட்டுகிறதே என்ற வியப்புதான் அவர்களுக்கு ஏற்படும். தங்கள் சக்தியின் பெரும்பகுதி இன்னும் வெளிவரவில்லை என்ற
ஏக்கமும் இருக்கும். “என்னை எல்லோரும் மேதை என்று சொல்கிறார்கள். ஆனால் கடலோரத்தில் சிறு கிளிஞ்சல்கள் சில பொறுக்கிய ஒரு சிறுவனின் நிலைதான் என்னுடைய நிலை. நான் கடலையே குடித்ததாய் பலர் நினைப்பது வியப்பளிக்கிறது” என்றவர் யார் தெரியுமா?… தாமஸ் ஆல்வா எடிசன்!!
Leave a Reply