ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

கடிகாரம் கற்றுத்தரும் பாடம்

ஹலோ ப்ரெண்ட்ஸ்,

மாணவர்களுக்கு பிடித்த வார்த்தைகளில் ஒன்று குரூப் ஸ்டடி. காரணம் குரூப் ஸ்டடி என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்பதுதான். இல்லையா ?

லீவு வேண்டுமென்றால் பள்ளியில் பாட்டியை இறக்க வைத்து விடுவோம். அதுபோல சினிமாவிற்கு போக வேண்டுமென்றால் வீட்டில் குரூப் ஸ்டடி என்று எடுத்து விடுவோம்.

குரூப்ஸ்டடியின் அருமை தெரியாததுதான் இதற்கெல்லாம் காரணம்.

எப்போதாவது உங்கள் கைகடிகாரத்தை கழற்றி அதன் பாகங்களை பார்த்திருக்கிறீர்களா?

இல்லையென்றால் சர்வீஸ் சென்டருக்கு சென்று டயலுக்கு பின்னால் உள்ள கடிகார கட்டமைப்பை பாருங்கள்.

சின்னதும் பெரிதுமாக நிறைய பல் சக்கரங்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து சுற்றிக் கொண்டிருக்கும். அதன் அமைப்புதான் நமக்கு முக்கியமான பாடம்.

சின்ன சக்கரம் பெரிய சக்கரம் என பல்வேறு அளவுள்ளவைகள் ஒன்றாக இணைந்ததால்தான் சின்ன முள், பெரிய முள், நொடி முள் என எல்லாவற்றையும் இயக்க முடிகிறது. எனவே நாம் குழுவாக இணைகிறபோது பல்வேறு திறமை உள்ளவர்களோடு இணைத்துக்கொள்ளலாம்.

ஒரு சக்கரத்தின் பல் மற்றொரு சக்கரத்தின் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பொருந்துவதால்தான் சக்கரம் சுழல்கிறது. அது போல குழுவிலும் மற்றவர் பலவீனத்தை நம் பலத்தால் நிறைவு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு சப்ஜெக்ட், ‘தனக்கு வராது’ என்று ஒருவர் நினைத்தால் அந்த சப்ஜெக்டில் நல்ல மதிப்பெண் பெறும் ஒருவர் அவருக்கு உதவ வேண்டும்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கடிகாரம் சொல்லும் மற்ற பாடங்கள் என்ன என்று உங்கள் நண்பர்களோடு விவாதியுங்கள்.

படிக்கும்போதுதான் என்றில்லை வாழ்க்கை முழுவதுமே குழுவாக செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

சரி, குழு என்றால் எத்தனை பேர் இருக்கலாம் ? எத்தனை பேர் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே இலக்கு இருக்க வேண்டும்.

குழு என்றால் ஆங்கிலத்தில் ற்ங்ஹம் என்பார்கள் இதன் விளக்கம் ற்ர்ஞ்ங்ற்ட்ங்ழ் ங்ஸ்ங்ழ்ஹ்க்ஷர்க்ஹ் ஹஸ்ரீட்ங்ண்ஸ்ங்ள் ம்ர்ழ்ங். குழுவான பின் முதலில் இலக்குகளை வகுத்துக் கொள்ளுங்கள். இந்த முறை சென்ற முறையைவிட அதிகம் மதிப்பெண் பெறுவோம் என்ற இலக்காக இருக்கலாம், எப்படியாவது சென்டம் எடுக்க வேண்டும் என்பது கூட இலக்காக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இலக்கு என்ற ஒன்று வேண்டும்.

குழுவாகக் கற்கும்போது என்ன விதமான பிரச்சினைகள் வந்தாலும் அதனை உடனே தீர்த்தல் அவசியம்.

தேவையற்றது என்று தோன்றும் பேச்சுக் களை உடனே நிறுத்துவது, தொடர்பில்லாத செய்திகளைப் பற்றி விவாதிப்பது, மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது போன்றவை குழுவின் வளர்ச்சி நிலையை பாதிக்கும்.

படித்ததை விவாதிப்பதற்காகவும் நினைவில் தக்க வைத்துக்கொள்ளவும் குழுவாகப் படிப்பது என்பது கண்டிப்பாக உதவும்.

எனவே குழுவாகப் படிக்கும் முயற்சியில் இறங்குங்கள். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே குழு அமைத்து படிக்கக் கற்றுக்கொள்வதால் குழுவாக செயல்படும் கலையை சீக்கிரத்திலேயே கற்றுக் கொண்டுவிடலாம். தேர்விலும் வாழ்விலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.

நூற்றுக்கு நூறு பெறநூறு வழிகள் :

1.குழுவின் பலத்தை உணருங்கள்.

குழு என்றால் மனிதர்கள் மட்டும் ஒன்றாவதில்லை. அவர்களின் திறன்களும் ஒன்றாகிறது. ஒன்றாக ஒரு செயலை செய்கிறார்கள் என்பது மட்டுமல்ல. அவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட மூளைகள் சங்கமிப்பதால் அதிக மூளைத்திறன் கிடைக்கிறது. ஓர் உதாரணம் பார்ப்போம். ஒரு செங்கல்லை வீடு கட்ட தவிர வேறு எதற்கெல்லாம் பயன் படுத்தலாம் என்று பட்டியலிடுங்கள். பிறகு உங்கள் நண்பர்கள் சிலரை அழைத்து அவர்கள் அனைவரையும் எழுதச் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் பத்து ஐடியாக்கள் யோசித்திருந்தால் குழுவாக இணைந்த பின் குறைந்த பட்சம் அது 40 ஐடியாக்களாக அவை உயர்ந்திருக்கும்.

2. ஒத்தவர்கள் ஒன்றாகுங்கள்.

உங்கள் குழுவின் நூறு பேர்கள் இருக்கிறீர்களா? ஐந்து பேர் இருக்கிறீர்களா? என்பது முக்கியமல்ல. மகாபாரதத்தில் நூறு கௌரவர்கள் அல்ல. ஐந்து பாண்டவர்கள்தான் ஜெயித்தார்கள். எனவே உயர்ந்த இலக்கு உள்ளவர்களை, ஒத்த சிந்தனை உள்ளவர்களாக உங்கள் குழுவை அமையுங்கள்.

3. பள்ளியே சிறந்த இடம்

குரூப் ஸ்டடி என்றவுடன் நமக்கு யாராவது ஒரு ப்ரெண்டு வீடுதான் நினைவில் வரும். ஆனால் குழுவாகப் படிப்பதற்கு பள்ளியே ஏற்ற இடம். காரணம் தனியாக கிளம்பி போக வேண்டியதில்லை. தினமும் சந்திக்கும் இடம். எனவே பள்ளியையும் குரூப் ஸ்டடி செய்கிற இடமாக மாற்றிக்கொள்ள வேண்டும். காலை, மாலை இடைவேளைகளிலும், மதிய உணவு நேரத்திலும், ஒன்றாக ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்கலாம்.

4. தூங்க முடியாது தம்பி

ஒன்றாகப் படித்தல் என்றால் ஓர் இடத்தில் உட்கார்ந்து படித்தல் என்றும் ஒரே பாடத்தை அனைவரும் படித்தல் எனவும் பொருள் கொள்ளலாம்.

சில பேருக்கு தனியாக உட்கார்ந்து படித்தால் சீக்கிரம் தூக்கம் வந்துவிடும். அல்லது சீக்கிரத்திலேயே ஆர்வம் போய்விடும் என்றால் அவர்களுக்கு இந்த முறை மிகவும் உதவிகரமானது.

5. கரையான்களை அனுமதிக்காதீர்கள்.

கரையான்கள் இருப்பதே தெரியாது. ஆனால் அது மெல்ல ஒன்றை அரித்து இருக்குமிடத்தை உபயோகமற்றதாக மாற்றிவிடும். சிலர் இந்த கரையான்கள் மாதிரிதான். ஒன்றாகப் படிக்கும் நேரத்தில் சினிமாவைப்பற்றி பேசுபவர்களை அல்லது இப்படி ஒன்றாகப் படிப்பதை கிண்டல் கேலி செய்கிறவர்களை எல்லாம் ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.

6. எனர்ஜி மீட்டர்

ஒவ்வொரு நாளும் உங்கள் உற்சாகத்திற்கு நீங்களே மதிப்பு கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒவ்வொரு நாளும் ஒருவரை ஆசிரியராக்கி அவரின் வழி நடத்துதலில் அந்த நாள் எப்படி உற்சாகமாக இருக்கிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக வழி நடத்துபவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கலாம்.

7. நேரம் மிச்சமாகிறது

வீட்டில் படிக்கும்போது மூடு மாறிவிட்டால் புத்தகத்தை வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்போம். ஆனால் குழுவாக இருக்கும் போது ஒருவரை பார்த்து ஒருவர் ஊக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே குறைந்த நேரத்தில் அதிக பாடங்களை படித்துவிட முடியும்.

8. சந்தேகத்திற்கே இடமில்லை

நண்பர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவடைதல் சுலபம். ஆசிரியர்களிடம் பயத்தின் காரணமாக கேட்காமல் விட்ட கேள்விகளைக்கூட நண்பர்களிடம் தைரியமாக கேட்டு தெளிவு பெறலாம்.

பாடங்கள் புரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுத்தும் தெளிவும்படுத்தலாம். பகிர்வதால் மட்டுமே அறிவு வளர்கிறது. பசிக்காத உடலும் பகிராத அறிவும் வளராது. சொல்லிக் கொடுப்பதால் பாடங்கள் நமக்கும் சந்தேகமின்றி நன்கு மனதில் பதியும். எனவே உங்கள் பாடங்களை மற்றவர்களுக்கு நடத்துங்கள். மற்றவர்களையும் நடத்தச் சொல்லி பழக்குங்கள்.

9. ஒன்றாக விளையாடுங்கள்

படிக்கும்போது மட்டுமல்ல. விளையாடும் போதும் ஒன்றாக இருங்கள். இதனால் பலப்படும் நட்பு படிக்கும்போது உதவியாக இருக்கும்.

குறுக்கெழுத்துப் போட்டி நடத்திக் கொள்ளுங்கள். விநாடி வினா நடத்திக் கொள்ளுங்கள். படிப்புக்கு உதவியாக இருக்கிற மாதிரி விளையாட்டைக்கூட அமைத்துக் கொள்ளுங்கள்.

10.வெற்றி- வெற்றி

ஒருவருக்கொருவர் நட்பு பலப்படுவதால் போட்டி பொறாமை நீங்கி எல்லோரும் வெற்றி பெறவேண்டும் என்கிற வெற்றி- வெற்றி மனநிலை ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *