“நல்லவர்கள், தீயவர்கள் இருவருமே காக்கப்பட வேண்டியவர்கள் என்கிறீர்களே சுவாமி! இது எதனால்?” என்று சீடர் குருவிடம் கேட்டார். குரு எதுவும் பேசாமல், கையிலிருந்த நோட்டில் ‘உ’ என்னும் எழுத்தைத் தலைகீழாக எழுதினார். சீடரின் நோட்டைக்காட்டி, “இது என்ன?” என்று கேட்டார்.
“சுவாமி! இது உ என்னும் எழுத்து என்றார் சீடர். ‘உ’ இப்படியா இருக்கும்” என்றார் குரு. “இல்லை சுவாமி! அது உ தான். ஆனால் தலைகீழாக எழுதப்பட்டிருக்கிறது” என்றார் சீடர். குரு சொன்னார், “எல்லா மனிதர்களுமே நல்லவர்கள்தான். சிலர் தலைகீழாக எழுதப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சரியான கோணத்தில் பார்த்துப்புரிந்து கொள்வது நம் கடமை”
பார்வையில்தான் எல்லாம்!!
Leave a Reply