இதழ் வழியே SMS

வெற்றிகள் – நம் வளர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன.
நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதைக் கற்பதால்..

தோல்விகள் -நம் மனதிற்கு வலு சேர்க்கின்றன.
நாம் எதைச் செய்யக் கூடாது என்பதைக் கற்பதால்..

மிகவும் நல்லவர்கள்

கால்பந்து விளையாட்டின்
கோல் கீப்பர் போன்றவர்கள்.
காப்பாற்றிய கோல்களைவிட
தவறவிட்டவையே கணக்கில் வருபவை.

எல்லா புதிய திட்டங்களும் நகைச்சுவைத்
துணுக்குகள்தான்..செயல்படுத்தும் வரை.

ஆப்பிள் விதைகளை எண்ணலாம்.
விதைகள் விளைவிக்கும் பழங்களை?
வருங்காலம் என்பதும் அது போலவே.

அமைதிக்கு இரண்டு வழிகள்:

உணர்வுகளை வெளிப்படுத்த
கண்ணீரின் உதவியையோ
கோபத்தை வெளிப்படுத்த
வார்த்தைகளின்
உதவியையோ
நாடாதீர்கள்..

வெற்றியாளர்கள் உதட்டில் அணிவது:

பிரச்சினைகளை சமாளிக்க “புன்னகை”
பிரச்சினைகளைப் புறக்கணிக்க “மௌனம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *