அந்த நதியின் மேற்பரப்பு பனியால் இறுகியிருந்தது. கால் வைத்துக் கடந்தால் உடைந்து உள்ளே இழுத்துவிடுமோ என்ற தயக்கத்தில் கைகால்களை மண்டியிட்டு தவழ்ந்து அங்குலம் அங்குலமாய் தாண்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். ”தள்ளுங்கள்! தள்ளுங்கள்!” என்று குரல் கேட்டது. கையில் இருபது கிலோ எடையுடன் வேக வேகமாய் ஒரு பெரியவர்.
நதியைத்தாண்டியதும் சொன்னார், ”உறைந்த நதி என்பது ஓடிக் கடக்க ஒரு வாய்ப்பு. நல்ல வாய்ப்புகளை சந்தேகத்துடன் அணுகினால் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்காமலேயே போய் விடுவாய்” என்று.
Leave a Reply