தன் பக்கத்து வீட்டுக்காரர் மீது பழியான வழக்கை ஒருவர் கொடுத்தார். தன் எதிரி பற்றி ஏராளமான அவதூறுகளையும் பரப்பினார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. நீதிபதி, அவதூறு பரப்பியதற்கும் அபராதம் விதித்தார். ”பழைய சொற்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்” என்று வாதாடினார். தன் எதிரியைப் பற்றி எழுதியதை எல்லாம் தாளில் எழுதி, கிழித்து, காற்றில்
பறக்கவிட்டு, திரும்பச் சொன்னார் நீதிபதி. அவ்வாறே செய்து திரும்பினார். ”காற்றில் பறந்த துண்டுகளைப் பொறுக்கி வாருங்கள்” என்று நீதிபதி சொல்ல இவர் தவித்தார். ”காற்றில் பறந்த காகிதம் போன்றவை உங்கள் அபிப்பிராயங்கள். திருத்திக் கொள்ளமுடியாத தவறு. எனவே அபராதம்” என்றார் நீதிபதி.
Leave a Reply