வாழ்வின் வெற்றிக்கு மூன்றே வரிகளில் வழி காட்டப் போவதாய் அந்த ஞானி அறிவித்தார். அந்த நாளில், அவருடைய ஆசிரம வாயிலில் ஊரே கூடியது. வெற்றி – தோல்வி – பகிர்தல் என்ற மூன்று வார்த்தைகளை சொல்லி, மெல்ல நகர்ந்தார் ஞானி. கூட்டம் பின் தொடர்ந்து விளக்கம் கேட்ட போது சொன்னார். ”தோற்போம் என்ற
எண்ணத்தை வெற்றி பெறுங்கள்”. ”குழந்தைகளுடன் விளையாடுவதில் தோற்று விடுங்கள்” ”பொருளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொடுங்கள்”.
Leave a Reply