மனசு பெரிய மனசு

அந்தத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்கு எல்லா வணிக நிறுவனங்களுமே நன்கொடைகள் தருவதுண்டு. ஒருவர் மட்டும் ஒரு தடவைகூட நன்கொடைகள் எதுவும் தந்ததில்லை. இத்தனைக்கும் ஒவ்வோர் ஆண்டும் அவருக்குக் கிடைக்கும் நிகர லாபம் மட்டும் மூன்று கோடி ரூபாய்.

அவரைச் சந்திக்கச் சென்ற தொண்டு நிறுவனத்தினர், மெதுவாக பேச்சைத் துவக்கினர். ”அய்யா! நீங்கள் இதுவரை நம் நிறுவனத்திற்கு நன்கொடையே தந்ததில்லை. ஆனால் உங்கள் நிகர லாபம் மட்டும் மூன்று கோடி ரூபாய் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன…”

இடை மறித்த தொழிலதிபர் கேட்டார், ”என் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்பதையும், அவருக்கு மருத்துவச் செலவு மட்டும் மாதம் ஒன்றரை இலட்சம் ஆகிறது என்பதையும் உங்கள் புள்ளி விபரம் சொல்லவில்லை? என் தம்பி விபத்தில் இறந்ததையும், அவன் குடும்பத்தினருக்கு மாதம் ஒரு இலட்சம் செலவாவதை உங்கள் புள்ளி விபரம் சொல்லவில்லையா? என் தங்கை கணவரின் நிதி நிறுவனம் திவாலாகி அவர்களுக்கு மாதம் இரண்டு இலட்சம் தேவைப்படுவதை உங்கள் புள்ளி விபரம் சொல்லவில்லையா?”

அதிர்ந்துபோன தொண்டு நிறுவனத்தினர், அவருடைய நிலைமை புரியாமல் நன்கொடை கேட்க வந்ததற்காக மன்னிப்புக் கேட்க வாய் திறந்தனர். அதற்குள் மீண்டும் அமைதியாகக் கேட்டார் தொழிலதிபர், ”அவர்களுக்கெல்லாமே நான் சல்லிக்காசு கூடத் தருவதில்லை. இதில் உங்கள் தொண்டு நிறுவனத்திற்கு எப்படி நான் நன்கொடை கொடுப்பேன்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *