ஒரு நிறுவனம், தன் அலுவலர்களை நடத்துகிற முறை குறித்து சில அறிவிப்புகளைச் செய்தது!
”இந்த நிறுவனத்தில் பகட்டாக உடை அணிந்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது. வசதியானவர்களை மேலும் வசதியானவர்கள் ஆக்குவது அழகல்ல.
இந்த நிறுவனத்தில் படுமோசமாக உடை அணிந்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது. பணத்தை நிர்வகிக்கத் தெரியாவர்களுக்குப் பணம் தருவது அழகல்ல.
இந்த நிறுவனத்தில் சுமாராக உடையணிந்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது. போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்பவர்களைக் கூடுதல் பணம் கொடுத்துக் கெடுப்பது ஒரு நிறுவனத்திற்கு அழகல்ல.
தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்பவர்களை மன்னிப்பது கடவுளின் இயல்பே தவிர கம்பெனியின் இயல்பல்ல.
மருத்துவ விடுப்புக்கு மருத்துவரின் சான்றிதழ் ஆதாரமாக இங்கே அங்கீரிக்கப்பட மாட்டாது. மருத்துவரிடம் போக முடிந்தவர்களால் அலுவலகத்திற்கும் வரமுடியும் என்று நிர்வாகம் கருதுகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு எடுத்துக் கொள்பவர்களுக்கு சம்பளப் பிடித்தம் கிடையாது. ஆனால் முன்னரே தெரிவிக்க வேண்டும்!!
Leave a Reply