இதழ் வழியே SMS

மனதிற்கும் மூளைக்கும் இடையே குழப்பங்கள்
ஏற்படும்போது
மூளை சொல்வதை கேட்காதீர்கள். ஏனெனில்
மூளைக்கு அனைத்தும் தெரியும்.
மனதிற்கு உங்களை மட்டும்தான் தெரியும்.

வலிகளையும் வேதனைகளையும் கடக்கின்றபோது….
இடி மின்னல் தாங்கி பொழிகின்ற மழைக்குப் பின்
வானவில் உதிப்பதை நினைவில் கொள்வோம்.

வெற்றியாளர்கள் முடிவுகளை
திட்டமிடுவதில்லை.
நல்ல துவக்கத்தையே
திட்டமிடுகிறார்கள்.
காரணம், சரியான முடிவுகள் சரியான
துவக்கத்தையே பின்தொடர்கின்றன.

வாழ்க்கை, இன்பம் இன்னல் இரண்டையும்
இரு பக்கம் கொண்ட நாணயம் போல.
ஏதேனும் ஒன்று மட்டுமே பார்வைக்கு
வசப்படும். மற்றொன்று அதன் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதை நினைவில் கொள்வோம்.

நம் பாதையின் குறுக்கே கிடக்கும் கற்கள்
தான், நாம் கடந்துவிட்ட பின் மைல்கற்கள்
ஆகின்றன.

மொத்த உலகத்திற்கும் பட்டுக் கம்பளம் விரிப்பதைவிட, நம் கால்களுக்கு காலணி அணிந்து கொள்வது சுலபம்.
அனைவரையும் புகார் செய்வதை விடுத்து
நம்மை மாற்றிக் கொள்வதே சரியானது.

வெள்ளம் சூழ்கையில், எறும்புகள் மீன்களின் இரை. வெள்ளம் ஓய்ந்தபின் கரையொதுங்கிய மீன்கள் எறும்புகளின் இரை. “காலம்” அனைத்தையும் நிர்ணயிக்கிறது. அனைவரும் அவரவர் வாய்ப்புக்காக காத்திருப்போம்.

கண்ணருகே இருக்கும் புத்தகத்தைப் படிப்பது எவ்வளவு கடினமானதோ, அதே போல்
கடினமானது, நம் நெருக்கமானவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *