மற்றவர்களின் அனுபவங்களைக் கேட்பதில் விருப்பமில்லாத இளைஞனிடம், விரைவில் செரிக்கும் முக்கிய உணவின் பட்டியலை எழுதச் சொன்னார் அவனுடைய தந்தை. அவனுடைய பட்டியலில் முதலில் இருந்தது, ”தேன்”. அதைப் பார்த்ததும் தந்தையின் முகத்தில் புன்னகை அரும்பியது. மகனிடம் கேட்டார், ”தேன் ஏன் சீக்கிரம்
செரிக்கிறது தெரியுமா? தேனீ அதை ஏற்கனவே செரித்துவிட்டது. மற்றவர்களின் அனுபவங்களும் தேன் துளிகள்தான். அவர்கள் அனுபவங்கள் உனக்குள் கலந்து சக்தி கொடுக்கும்.” இளைஞனுக்கு விஷயம் புரிந்தது.
saravanakumar
thank you sir