கத்தியைக் காட்டி பணம் கேட்ட திருடனிடம் தன் மணிபர்சிலிருந்த அத்தனை பணத்தையும் தந்தார் அவர். பெருமிதத்துடன் திரும்பிய திருடனை, தோளில் தட்டிக் கூப்பிட்டார். அவருடைய கையில் துப்பாக்கி இருந்தது. அதிர்ந்துபோன இளைஞனிடம் சொன்னார், ”உன் உயிரைப் பணயம் வைத்து பணம் கேட்கிறாய் என்றால் அந்த அளவு
உனக்கு தேவைப்படுகிறது என்று புரிந்துகொண்டேன். பலவந்தத்தால் நீ பணம் பெற்றதாக நினைக்காதே. இது பிச்சை எடுத்ததற்குச் சமம்”. பலவந்தத்தின் பலவீனம் அந்த இளைஞனுக்குப் புரிந்தது.
Leave a Reply