19ஆம் நுôற்றாண்டின் புகழ்பெற்ற வயலின் கலைஞர், நிக்கோலோ பகினினி. இத்தாலியில் பெருங்கூட்டம் முன் வாசித்தபோது, முக்கியமான கட்டத்தில் வயலினின் முதல் தந்தி அறுந்தது. அவர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக அடுத்தடுத்து இன்னும் இரண்டு
தந்திகள் அறுந்தன. ஒரே தந்தியில் வாசித்து முடித்தார். பலத்த கரவொலியிடையே அறிவித்தார். ”மொத்த கவனமும் ஒற்றைத் தந்தியில் குவிந்ததில் மற்ற தந்திகள் இல்லாததே தெரியவில்லை.” வெற்றியாளர்களுக்கு பாதகங்களும் சாதகமே!
Leave a Reply