காதலனைக் காணாமல் கலங்கினாள் அந்தப் பெண். கவலை தீர வழி கிடைக்குமென்று குருவிடம் போனாள். அவரோ அவளைப் பேச விடாமல் ஒரு பை நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்து, “இதை உடனே அந்த மலையுச்சிக்குக் கொண்டு போ” என்றார். மனச் சுமையும் கைச்சுமையும் தாங்கி மெல்ல நடை போட்டாள்.
சலிப்பும் சிரமமுமாய் நடந்தது பயணம். மலையுச்சியை சென்றடைந்தபோது அவள் காதலன் அங்கிருந்தான். அந்தப் பழங்களை ஆசையுடன் வாங்கினான்.
நம் விருப்பத்திற்குரியவர்களுக்காக என்று தெரிந்திருந்தால் பயணம் இனித்திருக்கும் என்று கருதினாள். எல்லா முயற்சிகளும் நம் அன்பானவர்களுக்காகத்தான் என்று தெரிந்தால் எந்தப் பயணமும் சுமையில்லை.
Leave a Reply