யார் வழி நடத்த வேண்டும், யார் வழி நடக்க வேண்டும் என்கிற பிரச்சினை, அலுவலகம் ஒன்றில் அடிக்கடி எழுந்தது. இந்த சிக்கல் மேலதிகாரியின் கவனத்திற்கு சென்றது. சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்த அதிகாரி, அறைக்குள் அங்கு மிங்கும் வேகமாக நடந்துவிட்டு, “புரிகிறதா?” என்றார்.
யாருக்கும் புரியவில்லை. பிறகு சொன்னார், “நான் இடதுகாலை முன்னெடுத்து வைத்ததுமே வலதுகால் தானாக முன் செல்கிறது. இடதுகாலைப் பின் தொடர்ந்தால் அடுத்த விநாடியே தான் வழிகாட்ட முடியும் என்று அதற்குத் தெரியும்” என்றார். வழி நடப்பவர்களே வழி நடத்துகிறார்கள்.
Suresh
its very gud for self confidence