வெறி பிடித்தவர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள்

வி. நடராஜன்

இந்தத் தலைப்பை படித்தவுடன் ஏதோ வாழ்வைப் பற்றி எதிர்மறையான கண்ணோட்டத்துடன் எழுதப்படும் ஒரு விஷயமாக இதைப்பற்றி நீங்கள் எண்ணலாம். உண்மையில் சமீபத்தில் நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தின் ஆங்கிலத் தலைப்பின் தமிழாக்கம்தான் இது! ஆம்! உலகப் புகழ்பெற்ற கம்ப்யூட்டர் சிப் நிறுவனமான ‘இன்டெல்’ () என்னும் நிறுவனத்தின் தலைவராக 37 ஆண்டுகள் பணியாற்றிய ஆண்ட்ரூ குரோவ் என்பவரின் வாழ்க்கைச் சரிதத்தின் தலைப்புதான், “”

கம்ப்யூட்டர் உலகில் என்னும் உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸுக்கு நிகராகப் பிரமிப்புடன் உச்சரிக்கப் படும் மற்றொரு பெயர்தான் ‘ஆண்ட்ரூ குரோவ்’

ஆண்ட்ரூவின் பூர்விகம் ஹங்கேரி என்னும் கிழக்கு ஐரோப்பிய நாடு. மிகவும் ஏழ்மையான, யூத இனத்தைச் சார்ந்த பெற்றோர்களின் ஒரே மகனாகப் பிறந்து, இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் யூத இனவெறியினால் மிகவும் அவதிப்பட்டு, தனது அத்தையின் உதவியுடன், அகதியாகக் காலணா காசு இல்லாமல் அமெரிக்கா விற்குப் புலம்பெயர்ந்து, தனது கடும் உழைப்பி னாலும், அசாத்தியமான புத்திக் கூர்மையினாலும் கடும் போராட்டங்களுக்குப் பிறகு தனது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் சிகரங்களையும் அதல பாதாளங்களையும் தொட்டவர் ஆண்ட்ரூ! வாழ்க்கையில் முன்னேற இரண்டு வழிகள் உண்டு. ஒன்று ராஜபாட்டை, மற்றது கற்களும் முட்களும் நிறைந்த பாதை. ஆண்ட்ரூ எப்பொழுதும் தேர்ந்தெடுத்தது இரண்டாவது பாதையைத்தான்!

சிறுவயதிலேயே காதுகேட்கும் சக்தியைப் பெருமளவு இழந்து விட்டாலும், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் மேற்படிப்பு படித்து வேதியியல் பொறியியல் துறையில் பல்கலைக் கழகத்தின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று, பின்பு ஆராய்ச்சிக்கான பட்டங்களையும் பெற்றார் ஆண்ட்ரூ. அக்காலத்தில் தொலைபேசித் துறையில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான “ஆஉகக கஅஆந” அவருக்கு வேலை தருவதாக வருந்தி அழைத்தும், அதை மறுத்து, அப்பொழுதுதான் துவங்கப்பட்ட புதிய நிறுவனமான ‘ஊஅஐதஇஏஐகஈ நஉஙஐ இஞசஈமஇபஞதந’ என்னும் நிறுவனத்தில் சேர்ந்தார் ஆண்ட்ரூ.

அதற்குக் காரணம் கம்ப்யூட்டர் சிப்களின் முன்னோடிகளாகக் கருதப்படும் ”அரை கடத்திகள் (நஉஙஐ இஞசஈமஇபஞதந) என்னும் பொருளை, உற்பத்தி செய்யும் ஆரம்ப கால நிறுவனமாக ஊஅஐதஇஏஐகஈ இருந்ததுதான். ஆண்ட்ரூவை அந்நிறுவனத்தில் அழைத்துக் கொண்டவர் அந்நிறுவனத்தின் தலைவரும் பின்னர் இன்டெல் நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவருமான கார்டன் மூர் என்பவர்தான். ஆண்ட்ரூவின் சவால்களை எதிர் கொள்ளும் தொழில் அணுகுமுறைகள் அவரை மிகவும் கவர்ந்தன.

1968ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இன்டெல் நிறுவனத்தில் தனது 32வது வயதில் உற்பத்தித் துறையின் தலைமை நிர்வாகியாகச் சேர்ந்தார் ஆண்ட்ரூ. இன்டெல் நிறுவனத்தின் எதிர் காலத்தையும் வளர்ச்சியையும் மட்டுமே கருத்தில் கொண்டு அதன் திசையையும் தலையெழுத்தையும் மாற்றி யமைக்கும் விதமாகப் பல்வேறு முடிவுகளை எடுத்த ஆண்ட்ரூ அவற்றில் அசாதாரணமான வெற்றிகளையும் கண்டார். ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலையும் மிகப்பெரியது. தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், சந்தைப் போட்டிகள் எல்லாவற்றிலும் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்தும், பல சமயங்களில் இம்முயற்சியில் தோல்வியுற்றும் அக்கால எலக்ட்ரானிக் துறையின் ஜாம்பவான்களான ‘ஹிட்டாச்சி (ஏண்ற்ஹஸ்ரீட்ண்) ஐஆங மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுடன் சந்தையில் சமரசம், போட்டி இரண்டையும் வளர்ச்சியின் தேவைக் கேற்பக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டார்.

கம்ப்யூட்டரின் இதயமான ‘சிப்’களின் ஒரு பகுதியான நினைவாற்றலை உள்ளடக்கி வைத்திருக்கும் தஅங (தஅசஈஞங அஇஇஉநந ஙஉஙஞதவ) என்னும் உபபொருளை அக்காலத்தில் மின்காந்தத் தொழில்நுட்பத்தின் மூலமே உற்பத்தி செய்து வந்தனர். ஆனால் இத்தொழில் நுட்பத்தின் காலம் முடிந்து விட்டது என்பதையும் எதிர்காலம் இனி ‘சிலிக்கான்’ என்னும் புதிய மூலப்பொருளில்தான் இருக்கிறது என்பதையும் 1960களிலேயே (மின் காந்தத் தொழில்நுட்பம் கோடி களைக் கொட்டிய காலம்) உணர்ந்த மூவர்களில் ஒருவர் ஆண்ட்ரூ. மற்ற இருவர் இன்டெல் நிறுவன ஸ்தாபகர்களான கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ் என்னும் ஜாம்பவான்கள்!

தனது தொழில் சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் பலமுறை அதன் விளிம்பிற்கே தள்ளப்பட்ட ஆண்ட்ரூ தனது சொந்த வாழ்க்கையிலும் அதன் ஓரத்திற்கே தள்ளப்பட்டார்.

ஆம்! சுக்கிலப் புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரைத் தாக்கியது. நோயுடன் போராடிக் கொண்டே கடுமையான உழைப்பைத் தொடர்ந்த அவர் ‘பார்க்கின்ஸன்’ என்னும் நரம்புத் தளர்ச்சி நோயினாலும் தாக்கப்பட்டு சுமார் 13 வருடங்கள் அவற்றுடன் போராடி 2005ஆம் ஆண்டு ‘இன்டெல்’ கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தன் வாழ்வின் வசந்த வாசல்களைத் திறந்த அமெரிக்காவிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் பல மில்லியன் டாலர்களை பல்வேறு பொது நல அமைப்புகளுக்குத் தானமாக வழங்கினார்.

உலகத் தொழிற்துறை வரலாற்றில் ஆண்ட்ரூவிற்குத் தனி இடம் உண்டு. அவரிடம் பழகியவர்கள் அவரை வணங்கினார்கள். அல்லது வெறுத்தார்கள். ஆனால் யாருமே அவரைப் புறக்கணிக்க முடிந்ததில்லை.

வாழ்க்கையின் மிகச் சாதாரணமான சவால் களிலேயே துவண்டுபோகும் இக்கால இளைஞர்கள் எவருமே படித்து, உணர்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஓர் அருமையான பாடம் ஆண்ட்ரூவின் வாழ்க்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *