மாற்றங்களின் பலம் மகத்தானது கட்டுரை எந்த தொழிலிலும் செய்யும் புதிய சின்னச்சின்ன மாற்றங்கள் மகத்தான வெற்றியை தருகிறது என்று உணர்த்தியது. கட்டுரையின் இறுதியில், மாற்றம் வந்தால் ஏற்றம் வரும். ஏற்றமே வெற்றியைத் தரும் என்ற வரிகளைப் படித்ததும் எங்களுக்கு தேர்தல்தான் ஞாபகத்திற்கு வந்தது.
ஷங்கர், கோபி
மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் அறியவேண்டிய ஆளுமைகள் தொடர் அடுத்த இதழ் எப்போது வரும் என்று எதிர்பார்க்கச் செய்கிறது. மே மாத இதழில் தாதா வாஸ்வானியின் “நிகழ்காலம் ஒன்று மட்டுமே நம் வசம் உள்ள செல்வம்” என்ற வரி எனக்குள் நம்பிக்கை ஒளி பாய்ச்சியது. நன்றிகள் கோடி நமது நம்பிக்கை மாத இதழுக்கு.
தங்கவேல், பவானி
நாம் தொடங்கும் முயற்சிக்கு பலன் இல்லை என்று நம் செயல்களை நிறுத்தாமல் முயற்சி ஒன்றே வெற்றிக்கான வழி என உணரவைத்தார் அனுராஜன். கிருஷ்ண.வரதராஜனின் கல்யாணப் பரிசு கணவன் – மனைவி புரிதலுக்கான அருமையான பரிசு.
சித்ரா, சென்னை.
பழகத் தெரிந்தால் பலே வெற்றி, எங்களின் தனித்தன்மை பிரதிபலிக்கச் செய்ய பளிச் டிப்ஸ்களை தந்தது. படம் சொல்லும் பாடம் அனைவருக்கும் சிறந்த படிப்பினை. விழுவது எழுவதற்குத்தான் என்று சொல்வார்கள். ஆனால் பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் பகுதியில் கபிலன் வைரமுத்துவின் உத்வேகம் தரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் மகிழ்ச்சியாய் அடிக்கடி தடுக்கி விழுகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு செய்தியோடுதான் எழுகிறேன் என்ற சிந்தனை அருமை.
பிரபாகரன், கோவை.
தொழிலதிபர் முகமது இலியாஸ் அவர்கள் பேட்டி அதிரடியாக இருந்தாலும் தேதியை குறிப்பிட்டு ஜனாதிபதி ஆவேன் என்று நம்பிக்கையோடு நில்லாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரின் எண்ணம் ஈடேற வாசகர்களின் சார்பில் வாழ்த்துகிறேன்.
சிவக்குமார், சங்கரன்கோயில்.
Leave a Reply