கற்பனைக்கு மேனி தந்து

அதிசயங்கள் சாத்தியம் என்கிறது அடோரா மல்டிமீடியா

‘கற்பனைக்கு மேனிதந்து கால்சதங்கை போட்டுவிட்டேன்!’ என்றொரு பாடல் உண்டு. ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சராய்’ கூடப் போடலாம் என்று சொல்கிறது, கிராபிக்ஸ் அனிமேஷன் மல்டி மீடியா துறை.

புதுமைகள் புகுந்து வருவதற்கான வாசல் களைத் திறந்து கொண்டேயிருக்கும் கிராஃபிக்ஸ் அனிமேஷன் துறையில் இன்று விரல் நுனியில் நிகழ்கின்றன வியப்பூட்டும் ஜாலங்கள்.

இன்றைய தொழில் நுட்பவளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது வெளி வரும் படங்களில் ஹீரோக்கள் அந்தரத்தில் பறந்து பறந்து சண்டையிடுவது, மிருகங்கள், கார்ட்டூன் சித்திரங்கள் அற்புதமாய் பேசி ஆடிப்பாடுவதும், பிரம்மாண்டமான கட்டிடங்கள் நொறுங்கி விழுவதும் வெகு சாதாரணமாய் நிகழ்கின்றன.

ஹாலிவுட் படங்களான ஜுராசிக் பார்க், டைட்டானிக், அவதார் முதல் தமிழ்ப்படங்களான தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன், எந்திரன், மாவீரன் ஆகிய அனைத்தின் வெற்றிக்கும் மல்டி மீடியா தொழில்நுட்பமே முக்கியக் காரணம்.
இன்று திரைத்துறையில் போஸ்ட் புரெடக்ஷன் என்று சொல்லப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், மிக்ஸி, மார்பிங் ஆப்டர் எபெக்ட்ஸ் ஆகியவைகளுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சினிமா தயாரிப்பு செலவில் சரிபாதியாகும்.

சினிமா மட்டுமின்றி டி.வி அனிமேஷன் சானல்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் ஆகியவற்றிலும், கம்ப்யூட்டர் கேம்ஸ், வீடு, அபார்ட்மெண்ட் வடிவமைப்பு விளம்பரங்கள் ஆகியவற்றிலும் மீடியா இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

இது குறித்து, கோவை அடோரா மல்டி மீடியா அகாடமிக் டைரக்டர் சத்யநாராயணன் கூறுகையில், மல்டிமீடியா துறையில் சாதிக்க அதிக கல்வித் தகுதி தேவையில்லை. 10ஆம் வகுப்பு, ‘2 முடித்திருந்தாலே போதும். தொழில் நுட்பத்தை தெளிவாக புரிந்துகொண்டு கற்பனைத் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

விளம்பரம், திரைப்படம், மருத்துவம், பேஷன் டிசைனிங், கார்ட்டூன் படங்கள் மற்றும் அச்சுத்துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்பு குவிந்துள்ளது.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தற்போது கல்லூரிகளில் பி.சி.ஏ., மற்றும் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்சில் அனிமேஷன் முக்கியப்பாடமாக வைக்கப் பட்டுள்ளது. புதிய வரவாக ‘மாயா 3டி’ என்ற புதிய சாப்ட்வேர் மூலம் ஓவியங்களை வரைந்து நடமாடச் செய்யலாம்.

பொறியியல் பட்டம் பெறாதவர்கள் கூட கைநிறைய ஐடி நிறுவனங்களில் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது அடோரோ மல்டிமீடியா நிறுவனம்.

மேல்நாடுகளில் பரவலாக உள்ள மெடிக்கல் அனிமேஷன், பார்மா அனிமேஷன் இன்ஜியரிங் சிமுலேஷன் ஆகிய பயன்பாடுகள் இந்தியாவிலும் மல்டிமீடியா துறையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அடோரா மல்டிமீடியா நிர்வாக இயக்குநர் திரு.செந்தில்குமார் கூறுகையில், பல சிறிய பெரிய வெளிநாட்டு சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு செலவை குறைக்கும் விதமாக போஸ்ட் புரெடக்ஷன் பணிகளை இந்தியாவில் அவுட் சோர்சிங் முறையில் செய்கின்றன. இதனால் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பல மடங்கு பெருகி உள்ளது.

நாஸ்காம் மற்றும் அமெரிக்க தொழிலாளர் அமைச்சக கருத்து கணிப்புப்படி மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் துறையின் தற்போதைய இந்திய சந்தை மதிப்புத் தொகை இருபத்தி எட்டாயிரம் கோடி ரூபாய். பொழுதுபோக்கு படங்களை எடுக்கும் வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்கள், தங்கள் படங்களை தயாரிக்க இந்தியாவிலுள்ள ஸ்டுடியோக்களுடன் ஒப்பந்தம் செய்ய முன் வந்துள்ளன.

எனவே, வரக்கூடிய ஆண்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப் படுகின்றனர். தற்போது கிராஃபிக்ஸ் கலையில் ரூ.12 ஆயிரம் துவங்கி ரூ.1.5 லட்சம் வரையும் சம்பளம் துவக்கத்திலேயே கிடைக்கிறது. எதிர்காலத்தில், மேலும் இன்னும் கூடலாம். கோவை அடோரோ மல்டி மீடியா (100 அடி ரோடு, பீளமேடு) நிறுவனம் ”உலக மல்டி மீடியா கூட்டமைப்பின் அங்கமாகும்.

இந்திய மல்டி மீடியா கூட்டமைப்பின் பதிவு பெற்றதாகும். ஐஎசஞம-இன் அ கிரேடு பயிற்சி நிலையமாக தெரிவு செய்யப்பட்டதாகும்.

அடோரோ மல்டி மீடியாவின் ”வெப் டிசைனிங்” கிளை 2009ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை “உ-யங்ப்ஹய்ம்ஹண்” என்ற வெப்சைட்டுக்காக பெற்றது.
உங்களுக்குள் இருக்கும் அனிமேஷன் கலைஞரை அடையாளம் காண விருப்பமா?
இவர்களைத் தொடர்பு கொள்ளுங்களேன்.

3 Responses

  1. Babunath

    hi dear all im studying arena animation B.A animation vfx if u r intersted to friendshio means just sms 9840968971

  2. rajiv k

    இன்றைய தொழில் நுட்பவளர்ச்சி நன்மையா?தீமையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *