கான்பிடன்ஸ் கார்னர் – 2

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் பங்கெடுத்ததால் 1,10,000 அமெரிக்க ஜப்பானியர்கள் முகாம்களில் வசிக்க வேண்டி வந்தது. அத்தகைய முகாம் ஒன்றில் வசித்தவோர் இளம்ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பாதங்கள் உள்நோக்கி வளைந்திருந்தன. தொடர் சிகிச்சையால் ஆறாம் வயதில் ஓரளவு

நடக்கத் தொடங்கியது குழந்தை. ஆனால் அன்னைக்கு மனநிறைவில்லை. ஐஸ் ஸ்கெட்டிங்கில் குழந்தையை சேர்த்தனர். காலை நான்கு மணிக்கே பயிற்சி தொடங்கும். அன்றைய விளையாட்டை முழுமை செய்யும்வரை அந்தக் குழந்தையும் கீழே இறங்காது. 15 ஆண்டு களுக்குப்பின் அமெரிக்காவுக்காக 1992 ஒலிம்பிக்ஸில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்ற அந்தக் குழந்தையின் பெயர் கிறிஸ்டி யமகுச்சி. உள்ளத்தின் உரமே உரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *