உங்களை விளம்பரம் செய்யுங்கள்

– சாதனா

இப்படியும் சில விளம்பரங்கள்

தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விளம்பர இதழ் போலவே தெரியும். காரணம் முதல் பக்கம் முழுவதும் விளம்பரமாக இருக்கும்.  சின்ன ஒரு கட்டத்தில் தலைப்பு செய்தியின் இரண்டு பாராக்களை போட்டுவிட்டு தொடர்ச்சி மூன்றாம் பக்கம் பார்க்க என்று போட்டிருப்பார்கள்.

>மேலும்…” />

ஆனால் தி ஹிந்து பத்திரிகை தனக்கென்று ஒரு விளம்பரக் கொள்கை வைத்திருக்கிறது. முதல் பக்கத்தினை பொறுத்தவரை கால்பக்கமோ அல்லது அதற்கும் குறைவான அளவிலோ மட்டுமே விளம்பரங்கள் வெளிவரும்.  காரணம் பேப்பரை பிரித்துப் படிப்பவர்களுக்கு அது செய்தி பத்திரிகையாக காட்சியளிக்க வேண்டும் என்பது தான்.

விளம்பரங்கள் தேவை. ஆனால் வெறும் விளம்பரங்களாக மட்டுமாக மாறிவிடக் கூடாது என்பது அந்நிறுவனத்தின் கொள்கை. அதனாலேயே அதற்கு விளம்பரங்கள் குவிகிறது. இந்தக் கொள்கையை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உதவும்.

உங்கள் பேனாகூட விளம்பரம்தான்

என் நண்பர் ஒருவர் பார்க்கர் மட்டுமே பயன் படுத்துவார். அதன் மூலம் தன் அந்தஸ்தைப்பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதாக நினைக்கிறார்.

2 ரூபாய் பேனா பயன்படுத்துகிற தேசத்தில் 200 ரூபாய் பேனா பயன்படுத்துகிறார் என்றால் பெரிய ஆள்தான் என்ற எண்ணத்தை  பலரின் ஆழ் மனதில் அது ஏற்படுத்திவிடுகிறது.

இன்னுமோர் உதாரணம் பார்க்கலாம்.

பொதுவாக ரெடிமேட் சட்டையில் அதன் பிராண்ட் பெயர், காலரில் பொறிக்கப்பட்டிருக்கும். சில பிராண்டுகளில், அதன் பிராண்ட் சிம்பளை பாக்கெட்டில் எம்ப்ராய்டரி செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு குரோக்கடைல் சர்ட்டில் முதலையை சின்னதாக எம்ப்ராய்டரி செய்திருப் பார்கள்.

எல்லா நிறுவனங்களும் தன் பிராண்ட் பெயரை சர்ட்டில் உற்றுப்பார்த்தால் தெரியும்படி பதிவு செய்திருப்பார்கள். ஆனால் பேசிக் சர்ட்டில் பேசிக் என்ற அதன் பிராண்ட் லேபிளை காலரில் மட்டும் இல்லாமல் சட்டையின் பட்டன் பகுதியில் எல்லோருக்கும் தெரியும்படி பெரிதாக வைத்திருக்கிறார்கள்.

விசாரித்தபோது பேசிக் ஷோரூம் வைத்திருக்கும் நண்பர் சொன்னார், “பேசிக் போன்ற பிராண்டுகள் எல்லாம் பெருமையின் அடையாளம். பேசிக் அணிந்திருக்கிறேன் என்பதுகூட விளம்பரம்தான்”.

நான் யோசித்தேன். அது பேசிக்கிற்கு விளம்பரமா? இல்லை பேசிக் மூலம் நமக்கு விளம்பரமா? இரண்டும்தான்.

விளம்பரத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பயன்படுத்தும்போது, அதுவே கூட நமக்கும் விளம்பரமாக அமைகிறது.

உங்களை விளம்பரம் செய்து உயருங்கள். நீங்கள் உயர்ந்த பின் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் விளம்பரமாகும். ரஜினியால் பாபாஜி புகழ் பெற்றதைப்போல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *