இரட்டை சம்பளம் வாங்குங்கள்

– கிருஷ்ண வரதராஜன்

கடந்த வாரம் ஒரு நிறுவனத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்தேன். பயிற்சியில் பங்குபெற்ற பணியாளர்களை பார்த்துக் கேட்டேன். ‘உங்கள் சம்பளத்தை முடிவு செய்தது யார்?’

(இந்த இடத்தில், உங்கள் பதிலை யோசித்துவிட்டு மேலே படியுங்கள். )

சிலர், ‘மேலாளர்’ என்றார்கள். சிலர், ‘நிர்வாக இயக்குநர்’ என்றார்கள்.

நான் கேட்டேன், “சரி. இன்று உங்களுக்கு பயிற்சி கொடுக்க வந்திருக்கிறேன். நான் செய்யப் போகும் இந்த வேலைக்கு எனக்கும் சம்பளம் உண்டு. எனக்கான சம்பளத்தை முடிவு செய்தது யார்?”

>மேலும்…” />

“நீங்கள்தான்” என்றார்கள் கோரஸாக.

“ஏன் எனக்கான சம்பளத்தை நான் தீர்மானிக்கி றேன்? ஏன், உங்களுக்கான சம்பளத்தை மட்டும் யாரோ தீர்மானிக்கிறார்கள்?” என்ற என் கேள்விக்கு எல்லோரும் யோசிக்கத் தொடங்கி னார்கள். நீங்களும் யோசியுங்கள்.

உண்மையில் அவரவர் சம்பளத்தை அவரவர் தான் முடிவு செய்கிறார்கள் தங்கள் வேலையின் மூலமாக.

“நீங்கள் இங்கே சேல்ஸ்மேன்களாக இருக்கிறீர்கள். அதற்கான சம்பளம் பெறுகிறீர்கள். இதுவே சூப்பர்வைஸர்களாக இருந்தால் அதற்கான சம்பளத்தை பெறுவீர்கள். மேலாளர்களானால் இன்னும் கூடுதலாக பெறுவீர்கள். எனவே நீங்கள் தான் உங்கள் சம்பளத்தை தீர்மானிக்கிறீர்கள்”.

முதலில் நீங்கள் என்ன வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். உங்கள் சம்பளம் தானாக இரண்டு மடங்காகும்.

அதிக சம்பளம் பெறுவதற்கான வழியை இன்னொரு கோணத்தில் யோசிப்போம்.
நீங்கள் வேலையில் சேர்கிறீர்கள். முதல் நாள் உங்களிடம் பத்தாயிரம் பணத்தைக் கொடுத்து, “இது நீங்கள் வேலை பார்க்கப்போகும் மாதத்திற்கான சம்பளம். வைத்துக்கொள்ளுங்கள்”. இப்படி எங்காவது சொல்லுவார்களா? நிச்சயமாக இல்லை.

முதல் ஒரு மாதம் நாம் வேலை பார்க்க வேண்டும். அந்த மாத முடிவில் நம் வேலைக்கான சம்பளம் வழங்கப்படும். இதுதான் நடைமுறை. இதிலிருந்து என்ன புரிகிறது? வேலைதான் முதலில். அதைப் பொறுத்துத்தான் சம்பளம்.

இரண்டு மடங்கு ஆற்றலை வெளிப்படுத்தத் தயாராகுங்கள். அதற்கான வழிகளை தொடர்ந்து பார்ப்போம்.

4 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *