“முதலடிக்கு ஏது முகூர்த்தம்” என்ற திரு.ரமணன் அவர்களது கட்டுரை மிக அருமை. தன் குழந்தை முதலடி எடுத்து வைக்கும் அழகை கண்டு, ஒரு தாய் பெறும் மகிழ்ச்சியை இந்த கட்டுரை எனக்கு தந்துவிட்டது. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கவிதா, கும்பகோணம்.
புத்தகம் என்ற ஒன்று நமக்கெல்லாம் பல காகிதங்களின் தொகுப்பு. ஆனால் அது ஒருவரின் உயிர்மூச்சாகவும் வாழ்வாகவும் மாறிய கதை விஜயா பதிப்பகம் திரு.வேலாயுதம் அவர்களின் நேர்காணலில் மிக அழகாக கூறப்பட்டுள்ளது. எனக்கும் இப்போது புத்தகத்தின் மீது ஒரு ஆர்வம் வந்துவிட்டது.
குமார், நெய்வேலி.
வேலைக்கு ஆட்கள் தேவையில்லை என்னும் பகுதி இந்த நவீன உலகில் திறமைசாலிகளுக்கே இடம் உள்ளது எனவே, தனது திறமையை வளர்த்துக் கொண்டால்தான் ஒரு மனிதன் தன்வாழ்வில் முன்னேற முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளது. அருமையான கருத்து.
ராம்சங்கர், பவானி.
வீட்டுக்கொரு பில்கேட்ஸ் நமது குழந்தைகளை பள்ளிக்குச் செல்லும் சிறு பிள்ளைகளாக அல்லாது நாளை ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக பார்க்க நமக்கு உதவுகிறது. நம் குழந்தையை புதிய மனிதனாக உருவாக்க நமக்கு உத்வேகம் தருகிறது.
காயத்ரி, திருப்பூர்.
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் : நம்பிக்கையூட்டும் பேச்சுகளுக்கு மட்டுமல்ல, எழுத்தும் கூட உயிரைக் காப்பாற்றும் சக்தி இருக்கிறது, என்ற வரிகள் உண்மையிலேயே பல ஆயிரம் உயிர்களை இன்று காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. என்னை உட்பட……
தங்க பரமேஸ்வரன், திட்டக்குடி.
ஜெயகாந்தன் சொல்வார், ‘புத்தகங்கள் வழியாக படைப்பாளிகளின் இதயத்தை பார்க்கிறீர்கள் என்று. “தறிகெட்டு எல்லா திசைகளிலும் மனம் ஓடும்போது அவற்றிற்கு ஒரு முட்டுக்கட்டை புத்தகங்கள். புத்தகம் படிக்கிற பழக்கம் வந்தால் நாட்டில் காவல்துறைக்கு வேலைகள் இருக்காது. ஒழுக்கம், நற்பண்புகள் அனைத்தையும் கற்றுத்தரும் ஆசான் புத்தகம்தான்” என்ற வரிகள் வாசிப்பின் முக்கியத்துவத்தினை வலியுறுத்திய விஜயா பதிப்பகம் திரு.வேலாயுதம் அவர்களின் நேர்காணல் வெகுசிறப்பு.
சூரியதாஸ், சிலட்டூர்.
Leave a Reply