அன்று இன்று

கலாச்சாரம், ஆன்மிகம் என பல நற்பண்புகளுக்கு பெயர் போன தமிழக மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி 1931இல் இச்சிறுவன் பிறந்தான்.

அவுல் பக்கீர் என பெயரிடப்பட்ட இச்சிறுவனின் தந்தை ஜைனுலாபுதீன், தன்னிடம் இருந்த சில படகுகளை அங்கிருந்த மீனவர்களுக்கு வாடகைக்கு கொடுத்து வந்தார்.

முறையாக கல்வி கற்கவில்லையே அன்றி அடர்ந்த ஞானமும், அறிவும் பெற்றவர் ஜைனுலாபுதீன். அவர் மகனை பள்ளிவாசல் தொழுகைக்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் அச்சிறுவன் தந்தையின் உண்மையான பக்தி கண்டு சிலிர்த்ததும் உண்டு.

அந்த தந்தை மகனுக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடம், “பயமின்றி உலகைப் பார்க்கப் பழகு” என்பதுதான். அச்சிறுவனுடன் பிறந்தவர்கள் 7 பேர். அதிகாலை 4 மணிக்கு துவங்கும் அவன் நாட்கள் தினமும் இரவு 11 மணிக்குத்தான் நிறைவு பெறும்.

தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும் அவுல் பக்கீர் முதலில் செல்லும் இடம் கணக்கு டியூஷன். மொத்தம் ஐந்தே பேர் படித்த டியூஷன் அது. டியூஷன் முடிந்ததும் அந்நகரில் இருக்கும் வீடுகளுக்கு எல்லாம் பேப்பர் போடும் வேளை அவுல் பக்கீருக்கு.

மின்சாரம் இல்லாத அந்நகரில் தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மண்ணெண்ணெய் விளக்கு கொளுத்தியிருப்பார்கள். அவுல் தினமும் இரவு 11 மணிவரை படிப்பார் என்பதினா லேயே அவர் தாய் மண்ணெண்ணெயை சிக்கனமாக செலவு செய்து மகன் படிப்பதற்காக சேமித்து வைப்பாராம்.

பள்ளியின் சிறந்த மாணவனாக தேர்வு பெற்ற அவுல் பக்கீருக்கு அவருடைய உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஐயாதுரை கற்றுக் கொடுத்த முதல் வெற்றி வாசகம், “நீ உண்மையோடும் தீவிரத்தோடும் எதில் ஆசை வைத்தாலும் அது உனக்கு நிச்சயம் கிடைத்தே தீரும்”. இந்த மந்திரம்தான் அவுல் பக்கீர் உலகை பயமின்றிப் பார்க்க ஊன்றுகோலாய் பின்னாளில் அமைந்தது.

ஏழ்மையின் தடைகள் கண்டு அசராத அவுல் பக்கீரை அதிசயத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திய ஒரே விஷயம், “பறக்கும் பறவைகள்” தான். பறவைகளின் இந்தச் செயல் அவருக்குள் எண்ணற்ற கற்பனைகளையும், விமானத்தை தான் இயக்க வேண்டும் என்ற கனவுகளையும் வார்த்தெடுத்தது.

ஆனால் பள்ளிக் கல்வியை முடித்ததும் கல்லூரியில் அவரால் படிக்க முடிந்தது என்னவோ இயற்பியல். இது அவருக்கு மன நிறைவை தராத போதும், கல்லூரி நாட்களில் அவருக்கு அறிமுகமான ஆங்கில இலக்கியமும், லியோ டால்ஸ்டாய், தாமஸ் ஹார்டி போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் புலமையும் அவர் நம்பிக்கைக்கு உந்துதலாய் அமைந்தன.

அவுல் பக்கீருக்கு, தான் விரும்பியதை படிக்க வேண்டும் என்ற தாகம் மட்டும் தணியவே இல்லை. தனக்கிருந்த அசராத நம்பிக்கையாலும் திறமையாலும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (விமிஜி) ஏரானோடிக்ஸ் (கிமீக்ஷீஷீஸீணீutவீநீs) படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் விமிஜி போன்ற கல்வி நிலையங்களில் படிப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அன்று அந்தக் கல்லூரியில் சேர 1000 ரூபாய் பதிவுத் தொகையாக கட்ட வேண்டியிருந்த நிலையில், தளர்ந்து போன அவுல் பக்கீருக்கு எதிர்காலம் குறித்து கனவுகள் கேள்விக்குறியாகத் தொடங்கின. ஆனால் அவருடைய திறமையின் மேல் கொண்ட நம்பிக்கையாலும், தைரியத்தாலும் பக்கீரின் சகோதரி தன் நகைகளை எல்லாம் அடகு வைத்து பக்கீரின் கல்விக்கு உதவினார்.

சிறு வயதில் பறக்கும் பறவையை பார்த்த பொழுது அவருக்குள் எழுந்த கேள்வி, ஆச்சரியம், வியப்பு எதையோ சாதிக்கப்போகும் கனவு என அனைத்தும் நிறைவேறத் துவங்கியது அப்போதுதான்.

பக்கீரின் அறிவுத் தேடலுக்கு சரியான இடமாக அமைந்த விமிஜியில் பல விமானங்களுக்கு நடுவே நிற்கிறோம் என்பதை உணர்ந்தபோது மிகவும் உற்சாகமடைந்தார். பக்கீர், தன் முதல் விமானத்தை இயக்கியதும் அங்குதான். அத்தோடு நேரத்தின் அருமையை அவர் கற்று கொண்ட இடமும் இதுவே…

ஒருமுறை அக்கல்லூரியில் சிஸ்டம் ஒன்றை வடிவமைக்கும் வேலையை செய்து வந்த பக்கீரை காண அங்கு வந்த கல்லூரி முதல்வர், இன்னும் வேலை முழுமையடை யாததைக் கண்டு இன்னும் இரண்டு நாட்களுக்குள் முடிக்காவிட்டால் அக்கல்லூரியில் அவர் படிப்பதற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை திரும்பப் பெறக்கூடும் என்று சொல்லிச் சென்றார். பல வருடக் கனவு இன்னும் சில மணி நேரத்தில் முடிந்துவிடுமோ என்ற பதற்றம் வந்த போதும் சாதிக்க முடியும் என்ற தீவிரத்தில் உணவு, உறக்கம் என அனைத்தையும் துறந்து பணியாற்றினார் பக்கீர்.

குறித்த நாளில் அந்த முதல்வர் வந்து பார்வையிட்டபோது பக்கீரின் வடிவமைப்பில் அசந்து போன அவர், “உன்னை மிகுந்த அழுத்தத்திற்குள்ளாக்கியும் உன்னால் குறித்த நேரத்தில் முடிக்க முடிந்து உள்ளதே..” என்று வியந்து பாராட்டினார்.

பக்கீர் இது போல பல வேலைகளுக்கு தலைமை தாங்கி அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதைக் கண்டு அவருடைய ஆலோசகர், மேஜர் ஜெனரல் திரு. சுவாமிநாதன் அவர்கள் பக்கீரின் தலைமைப்பண்புக்கான வெற்றி ரகசியம், “ஒரு வேலையை எடுத்துக் கொண்ட பின் அவரால் தலைவராகவும், அடிமட்ட தொழிலாளியாகவும் இருக்க முடிகின்ற இந்த தனித்தன்மைதான்” என்றார்.

பக்கீர் எடுத்துக்கொண்ட வேலைகளில் எல்லாம் மிக முக்கியமாக கருதப்பட்டது எஸ்.எல்.வி ஏவுகணையை விண்ணில் செலுத்தியதுதான். அந்த முயற்சி தோல்வி அடைந்த அதே வேளையில் அவருடைய சிறு வயது ஆசான் ஜலாலுதீன் மரணமடைந்தார். அடி மேல் அடி விழுந்த போதும் பக்கீர் சொன்ன வரிகள், “எனக்குத் தெரியும். இந்த வேலை வெற்றியில்தான் முடியும்….

இது கடுமையான உழைப்பினாலும், முயற்சியினாலும் செய்யப் பட்டது” அவர் நம்பிக்கை வெகு விரைவில் பிரம்மாண்ட வெற்றியாக உருமாறியது. எஸ்.எல்.வி -3 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தத்துவம், மதம், இலக்கியம், தடைகளிலிருந்து கற்ற பாடங்கள், அவ்வப்போது உதவிய உறவுகள் என அனைத்தும் அவர் விடாமுயற்சிக்கு வலு சேர்த்தன.

அன்று, தமிழகத்தின் கடலோரத்தில் தினசரி நாளிதழை வீடுகள்தோறும் போட்டு வந்தவர்……. இன்று, இவர் பெயரைத்தான் அனைத்து நாளிதழ்களும் தலைப்பு செய்திகளாக போடுகின்றன.

அன்று, படிப்பதற்கே மின்சாரமின்றி இருளில் துவங்கிய இவர் வாழ்க்கை…… இன்று, பாரத ரத்னா, பத்ம பூஷண் என இன்னும் ஏராளமான விருதுகளால் பிரகாசிக்கிறது.

அன்று, பறவையின் பறக்கும் சிறகை கண்டு அதிசயித்தவர்…….. இன்று, பிருத்திவி, அக்னி, ஆகாஷ், திரிசூல் என இவரால் விண்ணில், வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஏவுகணைகளைக் கண்டு உலகே வியக்கிறது.

மனம் சோர்ந்து போக வேண்டிய வேளையில் துடிப்புடனும், வாய்ப்புகளே இல்லாத இடத்தில்கூட வானளவு கனவு களுடனும் எந்த அச்சமுமின்றி உலகை எதிர் கொண்டு இன்று அசாத்தியமான வெற்றிகளைக் குவித்த இந்த வெற்றியாளர் யார்…………..?

அவர்தான் அவுர் பக்கீர் ஜைனுலாப்தீன்

அப்துல்கலாம் முன்னால் ஜனாதிபதி

(2002-2007)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *