அந்த ஆசிரியர் வித்தியாசமானவர்.
தன் பாடத் திட்டத்தின் அம்சங்களை நூற்றுக்கணக்கான கேள்விகளாகப் பிரித்து மாணவர்களை பதில்கள் தேடிக் கொண்டுவரச் சொல்வார். மாணவர்கள் புத்தகங்களில் புதையல் வேட்டை நடத்தி பதில்களைக் கொணர்வார்கள். புரியாத இடங்களை விளக்குவார். காரணம் கேட்டபோது சொல்வார். ”வாழ்க்கை என்பதே புதிதான கேள்விகளுக்கும், புதிரான கேள்விகளுக்கும் பதில் தேடிப் போகிற பயணம்தான்.”
Leave a Reply