– தமிழில் கனகதூரிகா
என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர்
பார்த்தல், கேட்டல், உணர்தல் இந்த மூன்றும்தான் நம் மனம் உள்வாங்கி கொள்கிற செய்திகளின் அடித்தளம். இந்த மூன்றையும் அடிப்படையாய் கொண்டு செய்திகள் தொகுக்கப் பட்ட அடுத்த நொடியே மனம் அதை சேகரிக்கத் துவங்குகிறது. சேகரிக்கத் துவங்கிய அடுத்த தருணமே மனம் அதை பல்வேறு விதமாய் பகுக்கிறது.
அந்தப் பாகுபாடுகளில் சில இந்த மாதம் முதல்…
புரோகிராம் -1
செய்திகளை உள்வாங்கிக் கொள்கிற விதத்தையும் அதை எப்படி பகுப்பது என்ற முடிவையும் நம்முடைய கடந்த கால அனுபவங்களே நிர்ணயிக்கின்றன. நாம் எதிர் கொள்கிற செய்திகளுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் பொறுப்பை, நம்முடைய பழைய அனுபவங்களே பெரும்பாலும் எடுத்துக் கொள்கின்றன.
நாம் சேகரித்து வைத்துள்ள முன் அனுபவங்கள்தான், இனி வரவிருக்கும் புதிய அனுபவங்களின் விதியை தீர்மானிக்கின்றன.
புரோகிராம் 2
பயிற்சி வகுப்பில் நடந்த சம்பவம் இது. அந்த அரங்கில் மொத்தம் பதினெட்டு மனிதர்கள் தங்களுக்கிருந்த குடி மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்த தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும் அவர்களுக்க விடவேண்டும் என்று ஆசையும் இருக்கிறது. இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அவர்களும் தீய பழக்கங்களை நிறுத்தாமல் தொடர்வதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டே யிருந்தார்கள். அவர்கள் கூறிய வாசகங்களில் சில இங்கே!
“இத்தோடு முப்பது வருஷம் ஆகியிருச்சு. என்னால் நிறுத்த முடியல”
“நிறைய பிரச்சனையிலிருந்து தள்ளி இருப்பதற்கு இது உதவியா இருக்கு”
“ரொம்ப நாளா இந்தப் பழக்கம் இருக்கு. இப்ப நிறுத்தினா உடம்புக்கு ஏதாவது பிரச்சனை வரும்”
“இந்தப் பழக்கம் என் தொழிலையோ, குடும்பத்தையோ எந்த வகையிலும் பாதிக்கல. அப்பறம் ஏன் நிறுத்தணும்”
இந்த அனைத்து வாசகங்களும் நமக்கு புன்னகையையே வரவழைக்கின்றன.
இதேபோல் மற்றுமோர் உதாரணம். இது அனாதை இல்லம் ஒன்றில் நடந்தது. அங்கே ஒரு மனிதர் யாருடைய வற்புறுத்தலும் இன்றி அவருடைய சுய விருப்பத்தில் அங்கு தங்கியிருப் போர்களுக்கு சேவைகள் செய்து வந்தார். நான் அவரிடம் கேட்டேன், “இது போன்ற விலை மதிப்பில்லாத சேவைகளைச் செய்ய எது காரணம்?” என்று. அவர் சொன்னார், “இது நம் அனைவரின் கடமை. இங்குள்ள பெரியவர்கள் எல்லாம் எனக்கு பெற்றோர்களைப் போல. இளையவர்கள் எல்லாம் எனக்கு குழந்தைகளைப் போல. இந்த சமூகத்தால் தான் நான் வாழ்கிறேன். இந்த சமூகம் எனக்கு கொடுத்ததில் சிலவற்றை இந்த சமூகத்திற்கே திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன். நான் ஒரேயொரு மனிதருக்கு சேவை செய்கிறேன் என்ற போதும் இந்த நிறைவு எனக்குத் தருகிற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கணக்கிட முடியாதது. மனிதர் சிறப்பாக செயல்படும் நேரத்தில் உதவ பலர் இருப்பார்கள். நானோ மனிதர்களின் துயரங்களில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன்.”
மேலே குறிப்பிட்ட எதுவும் வாசகங்கள் கிடையாது. “தாங்கள் செய்கிற செயல்களுக்கு காரணங்களை இணைத்துக்கொள்வது (ஹள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் ஜ்ண்ற்ட் ழ்ங்ஹள்ர்ய் ச்ர்ழ் ற்ட்ங்ண்ழ் ஹஸ்ரீற்ண்ர்ய்ள்)”
மேலே சொன்ன இரண்டு உதாரணங் களிலும் மனிதர்கள் தாம் செய்யும் செயலுக்கு மிக வலுவான காரணங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்தவிதமான காரணத்துடன் நம்மை இணைத்துக் கொள்கி றோமோ, அதைப் பொறுத்தே நாம் செய்கின்ற செயல்கள் சரி அல்லது தவறு என்ற அடையாளத்தைப் பெறுகிறது.
முதல் உதாரணத்தில் அவர்கள் இணைத்துக் கொண்ட காரணம் சரிதான். ஆனால் அந்த காரணம் அவர்களை இட்டுச் செல்லும் பாதை தவறு. இரண்டாம் உதாரணத்தில் அவர் செய்யும் செயலும் சரியானது. அதற்கு அவர் தன்னை இணைத்துக் கொண்ட காரணங்களும் சரியானது. இந்த இடத்தில்தான், “நாம் செய்வது சரி” என்ற படிப்பினை நமக்கு வருகிறது. ஒருவர் தன்னை எதனோடு இணைத்துக் கொள் கிறாரோ, அதுவே அவருடைய வாழ்க்கையை வடிவமைக்கிறது. இந்த உலகில் தவறான செயல்கள் செய்பவர்கள் என்று யாருமே இல்லை. அவர்கள் அனைவரும், ‘நாம் செய்வது சரிதான் என்ற நினைப்பில்” தவறான காரணங்களோடு தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள்.
இணைத்தல் (அள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய்) என்பது இரண்டு முனையில் கூர் தீட்டப்பட்ட வாள். நாம் எந்தக் காரணத்தோடு நம்மை இணைத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்வை சீராக்குகிறோமோ… இல்லை சீர்குலைக்கிறோமா என்பது தீர்மானிக்கப் படுகிறது.
“தினசரி இரவு தாமதமாக உறங்கச் செல்வதா லேயே என்னால் அதிகாலையிலே எழ முடிவ தில்லை” “தினசரி தாமதமாக உறங்கச்செல்கிறேன்” என்ற காரணத்தோடு இணைத்துக்கொள்கிறவரை நம்மால் நிச்சயம் அதிகாலையில் விழித்தெழவே முடியாது.
“நான் உறங்குவது எந்த நேரமாக இருந்தாலும், அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். ஏனென்றால் என் மனம் எதைச் சொல்கிறதோ, அதைத்தான் என் உடல் கேட்கிறது” – “என் மனம் சொல்வதை உடல் கேட்கிறது” என்ற காரணத்தோடு நம்மை இணைத்துக்கொள்கிற அடுத்தகணமே நம் உடல் படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து விடும்.
“என்னைப் புரிந்துகொள்ளாத நபரோடு இனி நான் பேசப்போவதில்லை”- என்று ஒரு பெண் சொல்லக்கேட்டேன். இங்கு அவர், “தன்னைப் புரிந்து கொள்ளவில்லை” என்ற காரணத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
“என்னை அவர் புரிந்து கொள்ளாதபோதும் நான் அவரோடு சென்று பேசப்போகிறேன். என்னுடைய பேச்சுமுறையை மாற்றிக்கொள்ள இது ஒரு சரியான வாய்ப்பாக இருக்கும்” – “இங்கு அவர் தன்னுடைய பேச்சுமுறையை (ஹல்ல்ர்ழ்ஹஸ்ரீட் ண்ய் ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) மாற்றிக்கொள்ள தனக்கு கிடைத்த வாய்ப்பு” என்ற காரணத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
நம்மை எதனோடு இணைத்துக் கொள்கி றோமோ அதுவே நாம் செய்கின்ற செயல்களையும் மற்றும் நாம் சொல்லாத செயல்களையும் தீர்மானிக் கின்றன. உங்களை எதனோடு இணைத்துக்கொள்கிறீர்கள்? நீங்கள் சொல்லிச் செய்ய செயல்களுக்கும் சொல்லாமல் செய்த செயல்களுக்கும் எதை எல்லாம் காரணமாக இணைந்திருந்தீர்கள்? சரியான காரணமில்லாதபோதும், நீங்கள் அதைச் சரியெனக் கருதி எந்த காரணத்தோடு உங்களை இணைத்திருந் தீர்களோ அதுதான் உங்கள் செயல்களின் அடிப்படை என்ற விழிப்புணர்வு உங்களுக்கு உண்டா?
புரோகிராம் 3
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரை ஜப்பானிய குரு வரவேற்றார். வந்திருந்த பேராசிரியர் ஜென் துறவியைக் காண வேண்டும் என்று ஜப்பானிய குருவிடம் தெரிவித்தார். பேராசிரியரோ தனக்கு அனைத்தும் தெரியும் என்ற மனநிலையில் வந்திருந்தார். இதை அறிந்த ஜப்பானிய குரு, பேராசிரியர் முன் வைக்கப் பட்டிருந்த கோப்பையில் தேநீரை ஊற்றத் துவங்கினார். கோப்பை நிரம்பி வழிந்தது. இருந்தும் ஜப்பானிய குரு ஊற்றிக் கொண்டேயிருந்தார். கோப்பை நிரம்பி ததும்பி வழியெல்லாம் வழிந்தோடுவதை பார்த்த பேராசிரியரால் அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“இதற்குமேல் அந்தக் கோப்பையில் ஊற்ற முடியாது. ஊற்றினாலும் அது எதுவும் கோப்பை யினுள் போகாது” என்றார்.
புன்னகைத்து ஜப்பானிய குரு சொன்னார், “நீயும் இந்த கோப்பையைப் போலத்தான். உன்னுடைய சொந்தக் கருத்துக்களிலும் எண்ணங் களிலும் மட்டுமே நிரம்பியுள்ளாய். நீ உன் கோப்பையை காலியாக்கும் வரை என்னால் எப்படி ஜென் துறவியை உனக்கு அறிமுகம் செய்ய முடியும்?”
புரோகிராம் 4
நான் ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் முப்பது ஆண்டுகளாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தவர். ஒரே ஒரு நொடியில் அந்தப் பழக்கத்தை நிறுத்தி, இதற்கு முன் குடிப்பழக்கத்தைப் பற்றி எதுவுமே அறியாதவர் போல் வாழ்க்கையை வாழத் துவங்கினார். நான் அவரிடம், இது உங்களுக்கு எப்படி சாத்தியப்பட்டது என்று கேட்டேன். “துவக்கத்தில் குடிப்பழக்கம் என் அனைத்து துயரங்களையும் துடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்பினேன். பின்பு அந்த குடி மட்டும்தான் என் உடல் சார்ந்த அனைத்து துயரங் களுக்கும் காரணம் என்ற உணரத்துவங்கியதும் அந்தப் பழக்கத்திலிருந்து விலகி யிருக்க முடிவு செய்தேன். எப்போதெல்லாம் அந்தப் பழக்கத்தின் ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு மலர் பசுமையாக மலர்வதை கற்பனை செய்யத் துவங்கி விடுவேன்.
குடி பற்றிய எந்தச் செய்திகளையும் கேட்காமல் விலகியிருந்தேன். இந்தப் பழக்கத்திற்கு ஒருவகையில் காரணமாக இருந்த சில நண்பர் களிடம் இருந்தும் விலகியிருந்தேன். எந்தத் தெருக் களில் எல்லாம் மதுபானக்கடைகள் உண்டோ, அந்தத் தெருக்களில் விலகியே இருந்ததால் ஒரு கட்டத்தில் எனக்குக் கிடைத்த அபரிதமான பலத்தில் குடி பற்றிய செய்திகள் காதில் விழுந்தால் வாங்கிக் கொண்டேன். நன்றாகக் குடிக்கும் நண்பர் களாய் இருந்தாலும் அவர்களிடம் பழகினேன். மது பானக்கடைகள் இருக்கும் தெருவிலேயே நடந்தேன். அப்பழக்கத்திலிருந்து “விலகியிருந்த” அந்தக் காலங்கள் என்னுடைய முந்தைய அடையாளத்தை மீட்டெடுக்கவும், அந்தப் பழக்கத்திற்கு முன் நான் எப்படி இருந்தேனோ அதேபோன்ற வசந்த காலத்தைச் சந்திக்கவும் எனக்கு உதவியாக இருந்தது. மற்றவர்களைப் பொறுத்தவரை இது ஓர் ஆச்சர்யமான செய்தி. ஆனால் என்னைப் பொறுத்தவரை மிகுந்த விழிப்பு உணர்வோடு நான் மேற்கொண்ட கடும்முயற்சி. இப்பழக்கத்திற்கு முன் நான் எப்படியிருந்தேனோ அதேபோல் என்னை மீட்டெடுத்துக் கொள்ள சில காலம் இதிலிருந்து விலகியிருந்தேன். இப்போது சூழ்நிலை என்னை எங்கு தூக்கியெறிந்தாலும் அங்கே நான் நானாக மட்டும்தான் இருப்பேன்.
“விலகியிருத்தல்” என்பது மிக சுவாரஸ்ய மான எண்ணம். சில நேரங்களில், தேவையில்லாத வைகளில் இருந்து நம்மைப் பிரித்து பார்க்கிற போதுதான், நம்முடைய உண்மையான செயல் திறனை வெளிக்கொணர முடிகிறது. எப்படி நம்மை காரணங்களோடு “இணைத்துக்கொள்கிறோமோ” அதுபோலவே காரணங்களிலிருந்து நம்மை ‘விலக்கிக்கொள்வதும்’ மிக முக்கியமாகிறது.
மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த மனிதர், தவறான பழக்கத்தை நிறுத்திக் கொள்ள, தன் உடல் நிலையை காரணம் காட்டி குடியிலிருந்து முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொண்டார். தேவையில்லாத வற்றிலிருந்து நம்மை வலுவாக விலக்கிக் கொள்கிறபோதுதான் நம்முடைய உண்மையான சுயத்தை நம்மால் அடையாளம் காண முடியும்.
நான் சமீபத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவருடைய காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார். அந்தப் பெண் யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டவர். அந்தப் பெண் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் அவரை ஏமாற்றிய அந்த ஆணினுடைய முகத்துடனும், அவருடைய செயல்களுடனும் தன்னை இணைத்து கொண்டேயிருந்தார். இது அவருக்கு வாழ்க்கையில் பெரும்சோகத்தையும் சோர்வையும் தனிமையையும் மட்டுமே தந்துள்ளது. இந்த சம்பவத்தை அந்தப் பெண் என்னிடம் ஒரு பயிற்சி அரங்கில் கூறினார்.
அப்போது நான் அவரிடம் கேட்டேன் “அப்படியானால் நீங்கள் இன்னும் அந்த ஆணினுடைய செயல்களோடுதான் உங்களை இணைத்துக் கொள்ளப்போகிறீர்கள். உங்களை ஏமாற்றிய அந்த ஆணை அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருக்கப் போகிறீர்களா? உங்களுக்கு மோசமான அனுபவத்தைக் கொடுத்த அந்த ஞாபகங்களை இன்னும் நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறீர்களா?”
இன்னும் நான் கேட்டுக்கொண்டே செல்லவும் அந்தப் பெண்ணிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. “இல்லை. நான் அதிலிருந்து முழுவதுமாக வெளியே வர விரும்புகிறேன்.”
இப்போது மீண்டும் அந்தப் பெண்ணிடம் கேட்டேன். இந்த மோசமான அனுபவத்தில் இருந்து உங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் உங்களை எதனோடு இணைத்துக் கொள்வீர்கள்? அந்தப் பெண் சொன்னாள், “இந்த சம்பவத்திற்குமுன் எனக்கிருந்த உற்சாகம், அழகு, நம்பிக்கை இவற்றுடன்தான் என்னை இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று அந்தப் பெண் கூறிய அடுத்த கணமே அவர்முகம் மலர்வதை என்னால் பார்க்க முடிந்தது. அவள் கண்கள் இப்போது இடம் வலம் என அனைத்துப் புறங்களிலும் நகர துவங்கியிருந்தது. அவள் இப்போது அறையிலிருந்த அனைவர் முகத்தையும் பார்த்தாள். தனக்குத்தானே உரக்க கைகள் தட்டிக் கொண்டாள்.
இப்படித்தான் “இணைத்துக்கொள்வதும்” “விலக்கிக்கொள்வதும்” நம்மை தேவையற்ற மன நிலையிலிருந்து தேவையுள்ள மனநிலைக்கு மடை மாற்றம் செய்யும். நியாயமற்ற செயல்களோடு நம்மை இணைத்துக் கொள்வதும் விலக்கிக் கொள்வதும் ஒரு வகையான சிந்தனை ஓட்டத்தை, மொழிநடையை, பழக்க வழக்கங்களை நமக்குள்ளே ஏற்படுத்தும். இவற்றை பிறரால் சுலபமாக பார்க்கவும், கேட்கவும், உணரவும் முடியும். இதுவே உங்கள் பிம்பத்தை, வாழ்க்கை முறையை, லட்சியங்களை உருவாக்கும் அல்லது உருக்குலைக்கும்.
ஒரு செய்தி நம் ஐம்புலன்களை எட்டிய வுடன், ஒன்று அதனோடு நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லது விலக்கிக்கொள்ள வேண்டும். எது உங்கள் விருப்பம்?
புரோகிராம் 6
ஒரு போர் வீரன், யோகி ஒருவரை பார்த்துக் கேட்டான். “உண்மையாகவே சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் உண்டா?” என்று.
“யார் நீ” என்று கேட்டார் யோகி.
“நான் போர் வீரன்” என்றான் அவன்.
“நீ போர் வீரனா? நீ ஒரு பிச்சைக்காரனைப் போல அல்லவா இருக்கிறாய்” என்று கூறியபடியே முகத்தைக் குறுக்கினார் யோகி.
கோபமுற்ற போர்வீரன், அவனுடைய வாளை எடுக்கத் துணிந்தான். அதைப் பார்த்ததும் யோகி தொடர்ந்தார். “ஓ! நீ வாள் வைத்திருக்கிறாய். ஆனால் என் தலையை எடுக்கும் வல்லமை உன் வாளுக்கு இல்லை.” மேலும் ஆத்திரமடைந்து வாளை வீசிய வீரனைப் பார்த்து யோகி சொன்னார், ” இங்கே துவங்குகிறது உன் நரகம்”
அந்த வார்த்தைகளை உள்வாங்கி வீரன், வாளை மீண்டும் உறையிலே இட்டு யோகியைப் பார்த்து தலை வணங்கினான்.
யோகி மீண்டும் சொன்னார், “இங்கே துவங்குகிறது உன் சொர்க்கம்.”
kumar.p
thanks dhuri