– அனுராஜன்
வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லது எப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றி கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றி பெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டை பார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று தோன்றும்.
பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் கலர் லேப் என்ற நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்த விஷயம் எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பதிலில்லை ஆச்சரியம். ஒரு நிமிடம் தாமதம் ஆனால்கூட பணம் வாபஸ் என்பதுதான் ஆச்சரியம்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ பிரிண்ட் செய்து தரப்படும் என்ற அறிவிப்பை பார்த்ததும், எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். ஆனால் அரை மணி நேரமாவது ஆகும் என்று தோன்றும்.
நிறுவனங்களின் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல, இப்பொழுதெல்லாம் யாரும் நம்புவதில்லை.
அதனால் அந்த நிறுவனம் அறிவிப்பில் ஒரு வரியை கூடுதலாக சேர்த்திருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி தாமதமானாலும் பிரிண்ட் இலவசம் . பணம் கட்டத்தேவையில்லை.
தொழிலில் ‘வெற்றி பெறச் செய்வோம்’ என்ற வாக்குறுதியைப் போலவே நிச்சயம் அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் பத்தே நிமிடத்தில் வாடிக்கையாளர்கள் மனங்களை வென்று விடுகிறார்கள்.
raja
Very nice sir thank u
JAMES P CAMARON
beautiful examples like beautiful quotes, especially ten minutes passports.
Surekaa
நல்ல தகவல்..!
நான் ஒரு கணிப்பொறி பழுதுநீக்கம் நிறுவனம் நடத்திவந்தேன். அதில்.. வாடிக்கையாளரின் கணிப்பொறியை 24 மணி நேரத்துக்குள் சரி செய்வது…அல்லது அவர்கள் எங்கு சரிசெய்தாலும்..அதற்கான தொகையை நாங்கள் கொடுப்பது என்று ஒரு உறுதிமொழி கொடுத்துவந்தோம்.
மேலும்..Pizza Hut ஆரம்பித்தபோது வேகமாக டெலிவரி செய்ய ஒவ்வொரு வண்டியிலும் Pizza வை வெடிக்கச்செய்யும் டைம் பாம் கட்டி அனுப்பினார்கள் அல்லவா?
kumar.p
nanum studiothan vachuruken romba nandri
hari dhayalan
Really its nice idea and good thought to get trusted customer. April 1 onwards Im also planning to keep my promise. If i failed, 10% of the Registration charges will be returned to customers.
Thanks for sharing.
Regards,
Hari Dhayalan – Auditor
Bangalore – India
9964 222 555