நமக்குள்ளே

இசைக்கவி ரமணன் அவர்களின் வார்த்தைகள் மிக அருமை. கூற வந்த கருத்துக்களை மிகச்சரியான வார்த்தைகளைக் கொண்டு அழகாய் விவரித்துள்ளார். படிக்கப் படிக்க மனம் ஆழ்ந்து போகிறது. அவரின் எழுத்துக்களுக்கு எனது நன்றிகள்.

பிரவீணா பிரபாகரன், கோவை.

ஒரு வாசகத்தை படித்தால் சில நொடிகளில் மறந்து போகும், ஒரு கதையை படித்தால் நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருக்கும். சிறந்த சிந்தனைகளை குட்டிக் கதைகளாக கூறுகிறது, “கான்ஃபிடன்ஸ் கார்னர்”. இந்த மாதத்தின் குட்டிக் கதைகள் அழகாக உள்ளது.
ரோஷ்ணா, ரத்தினபுரி.

மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது. மாற்றங்களின் மகிமையை மிகத்தெளிவாக உணர்த்துகிறது “மார்க்கெட்டிங் மந்திரங்கள்”. மார்க்கெட்டிங் துறையின் மகத்துவத்தை உணர இந்த கட்டுரை ஒரு அட்சய பாத்திரம்.
சதீஷ், சென்னை.

“அப்துல் கலாம்” இந்த பெயரே ஒரு கம்பீரம். நமது நம்பிக்கை இதழின் அட்டையை அலங்கரித்த திரு.அப்துல்கலாம் அவர்களின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போக வேண்டும். ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் நன்றி.
ரவி, மதுரை.

“யாதானும் தொழில்புரிவோம்; யாதும் அவள் தொழிலாம்” என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய்த் திகழ்ந்த தாமஸ்பாட்டா வாழ்க்கை வரலாற்றை மூன்றே பக்கங்களில் முத்துக்களைக் கோர்த்தாற்போல் ஆசிரியர் எழுதிய கட்டுரை வாசகர்களுக்கு வழங்கப்பட்ட திகட்டாத தீபாவளி விருந்து.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.

‘படம் சொல்லும் பாடம்’ புடம் போட்ட தங்கமாய் ஒளிர்ந்தது. படமும் பாடமும் ஆழமாய் மனதுள் பதிந்தது.
பி.கோபி பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

2 Responses

  1. சிவஹரி

    மதிப்பிற்குரிய ஆசியர் குழுமத்திற்கு,

    இனிய வணக்கங்கள்.! தங்கள் இத்தளத்தில் வெளியிடும் நமது நம்பிக்கை இதழ் மிகவும் பயனுள்ள வகையில் தன்னம்பிக்கை வேண்டுவோருக்கு தணிக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றது. அத்தகைய இதழ் கடந்த இரு மாதங்களாக வெளியாகவில்லையே! காரணம் அறிய விழைகின்றேன். மேலும் தங்களின் ஆக்கப்பூர்வமான இந்தப் படைப்பிதழை தொடர்ந்து வெளியிடுவீர்கள் என்றும் மாநம்பிக் கொள்கின்றேன்.

    நன்றியுடன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *