அந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்தன இரட்டைக் குதிரைகள். ஒன்றுக்கொன்று அடிக்கடி சண்டை போடும். இரண்டில் சண்டைக்குத் தானாக வராத சாதுக்குதிரை இறந்தது. ஒற்றைக் குதிரைக்கு உயிர் வலிக்கும் சோகம். பக்கத்து வயலில் மூத்து முதிர்ந்த
கழுதை ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. சோகமாயிருந்த குதிரையிடம் அது சொன்னது, “உடனிருந்த குதிரை உயிருடன் இருந்தபோது கற்றுத்தராத பாடத்தை இப்போது கற்றுத் தந்தது. பிரியத்துக்குரியவர்கள் வெறுப்புக் குரியவர்கள், அனைவருமே ஒரு நாள் இறப்பார்கள் என்கிற உணர்வுடன் அவர்களிடம் பழகு. நீயும் ஒரு நாள் இறப்பாய் என்பதையும் நினைவில் வை. உறவுகளில் பூசல் வராது என்றது கழுதை. இது குதிரை களுக்கு மட்டுமா என்ன?
vicky
good!
thanks!