அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருப்பான். இன்னொருவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். அழுதுகொண்டேயிருக்கும் குழந்தையை திருப்திப்படுத்த அவன் அறையில் அதிநவீன
பொம்மைகளை வாங்கி நிறைத்து வைத்தார் அப்பா. பள்ளிவிட்டு வந்ததும் பரவசப்படுவான் என்பது அவர் நினைப்பு. அவனோ அறைக்குள் வந்து பார்த்து அழுது புரண்டான். “எனக்கு இந்த பொம்மைகளைப் பயன்படுத்தத் தெரியாது. உடைத்துவிடுவேன். அப்பா அடிப்பார்’ என்றழுதான். நொந்து போன அப்பா, எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கும் பிள்ளையைப் பரிசோதிக்க அவன் அறையில் குதிரைச் சாணத்தைக் கொட்டி வைத்தார். வந்து பார்த்தவன் மகிழ்ந்தான். ‘எனக்கு குதிரைக்குட்டிகள் ஞாபகம் வந்து விட்டது. அவை அழகாக இருக்கும்.
துள்ளிக் குதிக்கும். இன்று கனவில் அவற்றோடு விளையாடுவேன்” மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது.
Leave a Reply