எவ்வளவு களிமண்ணைத்
திரட்டி நீங்கள் பாத்திரம்
செய்தாலும், அதன் உள்ளே உள்ள
வெற்றிடம்தான் பயன்படுகிறது.
எவ்வளவு தகவல்கள் திரட்டினாலும்
உங்கள் மனதில் உள்ள வெற்றிடமே
புதிய சிந்தனைகளைப்
பிறப்பிக்கிறது.
காலின் நுனி
விரல்களை
ஊன்றி நடக்கமுடியாது…
தன் திறமைகளைத் தானே
மெச்சினால் வளர முடியாது…
தன்னுடைய நலனையே
நினைப்பவன்
மலர முடியாது…
பிறரை உணர்ந்தவன்
புத்திசாலி
தன்னையே உணர்ந்தவன் அறிவாளி.
சுத்த வீரன் மென்மையானவன்
யுத்தத்தில் சிறந்தவன் கோபத்தில் கொதிப்பதில்லை.
நீங்கள் யுத்தத்தில் வெல்ல மிகச்சிறந்த வழி
எதிரியைக் கொல்வதல்ல…………………
தூண்டிவிடுவதுதான்.
சமுத்திரத்தில் ஏன் எல்லா
நதிகளும் சங்கமிக்கின்றன?
சமுத்திரம் எஹல்லா நதிகளையும்விட
தாழ்வாக இருக்கிறது.
பணிவாய் இருப்பவனை நோக்கிப்
புகழும் பெருமையும்
தானே ஓடிவருகின்றன.
பெரிய தேசத்தை
ஆள்வதென்பது
சிறிய மீனை சமைப்பதைப்
போன்றது.
உலகில் என்ன இருக்கிறது
என்பதை உணர
உங்களுக்கு என்ன இருக்கிறது
என்பதை உணருங்கள்.
பிணங்கள் விறைத்துப்
போகின்றன.
செத்த தாவரங்கள் உலர்ந்து விடுகின்றன.
விறைப்பாகவும் ஈரமின்றியும்
இருப்பவர்கள்………..
செத்தவர்களுக்குச்
சமம்!
வாசலைத்தாண்டி
வெளியே வராதவர்களுக்கு
உலகம் சொந்தமில்லை.
ஜன்னல் வழியாகவேனும்
மேலே பாராதவர்களுக்கு
வானம் சொந்தமில்லை.
fathima
nice