குடைகள் – மழையை
நிறுத்துவதற்காக அல்ல
மழையிலிருந்து உங்களை
பாதுகாக்கவே…
அதுபோல்தான்,
நம்பிக்கைகள் வெற்றியை
கொடுப்பதற்காக அல்ல.
தோல்விகளை
எதிர்கொள்வதற்காக…
நீங்கள் கடுமையாக
விமர்சிக்கப்படும் போது
நினைவில் கொள்ள
வேண்டியது. பந்தயத்தில்
ஆர்ப்பரித்து ஆரவாரம்
செய்வது பார்வையாளர்கள்தான்
போட்டியாளர்கள் அல்ல.
வெற்றி என்பது
உலகுக்கு உங்களை
அறிமுகம் செய்வது.
தோல்வி என்பது
உலகை உங்களுக்கு
அறிமுகம் செய்வது.
உங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு
நாட்களும் பொன்னான நாட்கள்தான்
தோல்வியை தழுவிய நாட்கள்
அனுபவத்தையும்,
துவண்டிருந்த நாட்கள் சிறந்த
பாடத்தையும்,
மிகச்சிறந்த நாட்கள்
அழகான நினைவுகளையும்
நமக்கு பரிசளிக்கின்றன.
மரத்திலிருந்து உதிர்கின்ற இலைகள்
காற்றின் திசையில்தான் நடக்கிறது.
மற்றவர்களின் திசையில் இயங்கும்
இலைகளாக இல்லாமல்
மற்றவர்களை இயக்கும்
காற்றாக இருக்கலாம்.
சிரிக்க சிந்திக்க:
முந்தைய காலத்தில்
கடிகாரங்கள் இல்லை
ஆனால் கடினமாக உழைக்க போதிய
நேரம் இருந்தது.
இன்று
கடிகாரங்கள் மட்டும்தான் உண்டு
உழைப்பதற்கு நேரம் இல்லை!
fathima
thanz. nice lines 3d line is very nice
Aanand k
“இதழ் வழியே SMS” தலைப்பு எனக்கு புரியவில்லை.
நல்ல புரிதல் உள்ள, புரிந்துகொண்டு சிறப்புஅடைய உதவும் அற்புதமான கவிதை. கவிதைகள் நான் படித்ததுண்டு. காதல் கவிதை,தத்துவ பாடல் என்று படித்து இருக்கிறேன்.காதல் கவிதை படித்து சிலாகித்துப்போய் பழக்கப்பட்ட எனக்கு,இதை முதலில் கவிதை என்று சொல்வதா அல்லது என்ன என்று சொல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.அவற்றில் இருந்து வாழ்கைக்கு தேவையான,மனதிற்கு,எண்ணத்திற்கு தேவையான சத்துகள் கொண்ட கவிதையாக இது உள்ளது.வார்த்தைகள் மூலம் புரிதல்களை உணரவைத்து,வாழ்க்கையின் வலிகளை,வேதனைகளை புரிந்து கொள்ள உதவும் ஒரு வழிகாட்டிகளாக வரிகள் உள்ளன.
அருமை.
நன்றி.