அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தல் லிஃப்ட்டில் பயணம் செய்தார். லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னை
வேலைக்கு வர வேண்டாமென்று சொன்னதாய் முறையிட்டு வருந்தினான். அவர் அரசாணையைக் காட்டினார். அவனை விட குறைவா படிச்ச நான் முதலமைச்சரா இருக்கலாம், எட்டாவது படிச்ச பையன் லிஃப்ட் பொத்தானை அமுக்கக் கூடாதாண்ணேன்! சட்டத்தை மாத்துங்கண்ணேன்!” சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர்.
Leave a Reply