CŸH Þô‚Aò Üø‚è†ì¬÷ ðK²
கவிஞர் டாக்டர் சிற்பி அறக்கட்டளை சார்பில் மூத்த கவிஞர்களுக்கு விருதும் இளங்கவிஞர்களுக்கு பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ரூ.10,000/ரொக்கப் பரிசும் பட்டயமும் இதில் அடங்கும்.
இந்த ஆண்டு,கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா, கவிஞர் அழகிய பெரியவன், கவிஞர் சக்தி ஜோதி, கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோருக்கு இலக்கியப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கவிஞர் கலாப்ரியா, கவிஞர் இளம்பிறை ஆகியோர் விருது பெறுகின்றனர். ரூ.20,000 ரொக்கப் பரிசும் பட்டயமும் இதில் அடங்கும்.
கவிமாமணி டாக்டர் அப்துல் காதர் இந்த விழாவில் சிறப்பிக்கப்படுகிறார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலையில் பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவில் கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையேற்று விருதுகளை வழங்குகிறார்.
Leave a Reply