வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன். ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர், “இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார். சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன. மறுநாள் மீண்டும் கதவைத்
தட்டினான் சிறுவன். கதவைத் திறந்து கத்த வாய் திறந்த பெரியவர் கண்கள் மலர்ந்தன. சிறுவன் கைகளில் சின்னச் சின்ன நாய்க்குட்டிகள் இரண்டு. பெரியவருக்குக் கிடைத்தது இரண்டு நாய்க் குட்டிகளும் ஒருபேரனும்..
தேவைகள் அறிந்து துணையாய் இருந்தால்
சேவைகள் அதைவிட எதுவும் இல்லை.
Leave a Reply