தன் நிலத்தில் முளைத்த களைகளை சபித்துக் கொண்டிருந்தார் அந்த விவசாயி அருகில் இருந்த முதியவர் ஒருவர் கேட்டார், “தம்பி! வயல் யாருடையது?” “என்னுடையதுதான்” என்றார் விவசாயி. “உங்கள் நிலத்தில் விளைகிற பயிர்கள் போலவே களைகளும் உங்களுடையவை. பயிர்கள் விளைந்ததும் அறுவடை செய்கிறீர்கள்.
களைகளை தொடக்கத்திலேயே அகற்றுகிறீர்கள். விளைச்சலைப் போலவே களைகளும் உங்களுடையது என்று உணர்ந்தால் இப்படிப் புலம்ப மாட்டீர்கள். அமைதியாக அகற்றுவீர்கள்” என்றார்.
தன் நல்ல குணங்கள் போலவே தீய குணங்களுக்கும் மனிதன் பொறுப்பேற்றால் எளிதில் அகற்றலாம்.
Leave a Reply