கான்பிடன்ஸ் கார்னர் – 1

வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார். செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின. வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு. அதே தண்ணீர். அதே உரம்.

அதே இடம். இது எப்படி சாத்தியம்? கிழவர் சொன்னார், “அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.

உறவுகள் வளர்வதற்கும் மனநிலையே முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *