ஒரு மனிதர் எதற்கெடுத்தாலும் எல்லோரிடமும் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார். ஒலிகளை ஆராயும் விஞ்ஞானி ஒருவர், ஒரு முறை அவரது பதட்டங்களையும் போடுகிற சத்தத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். தன் மனைவியிடம் காபி சூடாக இல்லை என்பதற்காக அவர் அப்போது சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
விஞ்ஞானி அவரை அழைத்து காதோடு எதையோ சொன்னார். அன்று முதல் அவர் சத்தம் போடுவதை நிறுத்திக்கொண்டார். விஞ்ஞானி சொன்னது இதுதான். “நீங்கள் விடாமல் எட்டு ஆண்டுகள்- ஏழு மாதங்கள்- ஆறு நாட்கள் சத்தம் போட்டால், அந்த சத்தத்தில் கிடைக்கிற மொத்த சக்தி, ஒரு கப் காபி சூடு செய்ய மட்டுமே போதுமானது!”
மௌனத்தில் சக்தி சேமிக்கப்படுகிறது.
Leave a Reply