‘அறிய வேண்டிய ஆளுமைகள்’ தொடரில் அயல்நாட்டு வங்கிக்கு தலைமையேற்ற முதல் இந்தியப்பெண்மணி நைனா லால் கித்வாய் உண்மையிலேயே பெண்ணினத்திற்கு ஒரு மணிமகுடம். ஆசிரியரின் கடைசிப்பக்க கவிதை மிகவும் அருமை.
நெல்லை உதயா
திருப்பூர்.
கிருஷ்ண.வரதராஜன் எழுதி வரும் மாணவர் பகுதி பெற்றோர்களுக்கு உரிய பாடம் கற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற கட்டுரைகள் மாதா மாத வெளியிடும் நமது நம்பிக்கைக்கு மிக்க நன்றி. இக்கட்டுரைகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த உறுதுணையாய் உள்ளது.
அலமேலு, கீழப்பாவூர்.
இந்த விளம்பர யுகத்தில் தான் செய்யும் அறப்பணிகளை பிறர் அறியா வண்ணம் செய்யும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு ”சடையப்ப வள்ளல்” விருது வழங்கியது சரியான தேர்வு.
சதீஷ்,
கோவை.
இளம் சாதனையாளர் சக்திஜோதி தனது நேர்காணலில் ‘ஆரோக்கியமான இளைய சமூகத்தை ஊக்குவிப்பதே எதிர்கால திட்டமாக’ கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.
பிரமநாயகம்,
தென்காசி
அக்டோபர் இதழில் ரிஷபாரூடன் எழுதிய குழந்தைகளைப் பற்றிய கட்டுரையில், ‘குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம்’ என்பதை எத்தனையோ பேர் இன்னும் உணராமலே உள்ளார்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
ரமேஷ்,
கோபி.
‘பேசத்தான் ஆசை’ என்கிற நகைச்சுவைத் துணுக்கு எங்களை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது. ‘அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை’ ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. நமது நம்பிக்கைக்கு நன்றி!
ஜெ.பூபால்,
கோவை.
Leave a Reply