கொடும்நோயால் மரணப்படுக்கையில் இருந்த இளம்பெண் உறவினர்களிடம் சொன்னாள், ”நான் இறந்ததும் என் கையில் ஒரு கரண்டியை வையுங்கள். புதைக்கும்போதும் அகற்றாதீர்கள்” என்று. காரணம் கேட்டபோது சொன்னாள், ”சின்ன வயதில் பாட்டியுடன் விருந்துக்குப் போகும்போது, முதல் இரண்டு உணவு
வகைகளிலேயே நிறைவடைவேன், பாட்டி சொல்வார், ”இன்னும் சுவையான உணவுகள் வரலாம். கரண்டியை கையிலேயே வைத்திரு” என்று. கரண்டி எதிர்பார்ப்பின் அடையாளமாகி விட்டது எனக்கு. வாழ்க்கை என்கிற விருந்தையே, ”இன்னும் இன்னும் என்று எதிர்பார்த்தேன். மரணத்தின்பின்கூட அந்த எதிர்பார்ப்பு இறக்கக்கூடாது என்பதே என் கடைசிச் செய்தி!!” அந்தப் பெண்ணின் மரணத்தில் பலருக்கும் வாழ்க்கை புரிந்தது.
Leave a Reply