– கிருஷ்ண வரதராஜன்
தந்திரா ஹாலிடே ஸ்கூலின் சென்னை சம்மர் கேம்பில் தன் குழந்தையை சேர்க்க வந்திருந்த ஒரு பெண்மணி கேட்டார், “கேம்ப் அரை நாள்தானா ஃபுல்டே கிடையாதா? இவங்கள வீட்டுல வைச்சு மேய்க்க முடியல?”
‘மேய்ப்பதற்கு குழந்தைகள் என்ன ஆடா? மாடா?’
பெற்றோர்களையும் குறைசொல்ல முடியாது. எக்ஸாம் முடிந்து லீவு விட்டால் தங்களை சுதந்திரப்பறவைகளாகத்தான் குழந்தைகள் நினைத்துக்கொள்கிறார்கள். ஸ்கூல் இருக்கும் நாட்களில் குழந்தைகள் ஜெயில் பறவைகள்தான்.
எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? எல்லாமே பெற்றோர்கள்தான் தீர்மானிப்பார்கள். குழந்தைகளும் வேறு வழியின்றி பெற்றோர்கள் சொல்வதையெல்லாம் கேட்பார்கள்.
ஆனால் லீவு விட்டாச்சு என்றால் எங்களை எதுவும் கேட்கக்கூடாது என்பதுதான் எல்லாக் குழந்தைகளின் மனநிலையும். இவர்களுக்கு மட்டும் எங்கேயிருந்து வந்தது இவ்வளவு சக்தி. நாள் முழுக்க சோர்ந்தே போகாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே.. காலையில் எழுந்தபோது இருந்த சுறுசுறுப்பு இரவானாலும் குறையாமல் கூடிக் கொண்டே இருக்கிறதே..
குறும்புகள் அதிகமானால் புத்தகத்தை எடுத்து படி என்று பயமுறுத்தலாம். லீவு நாட்கள் என்பதால் அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.
லீவில் ஜாலியாக இருக்க வேண்டும் என்பது மாணவர்களின் எண்ணம். லீவை குழந்தைகள் உபயோகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோர்கள் எண்ணம். இரண்டையும் நிறைவேற்ற வழிகாட்டத்தான் இந்த கட்டுரை. கோடை விடுமுறையில் ஓய்வான இந்த தருணத்தில் உங்கள் குழந்தைகளிடம் நீங்களே எதிர்பார்க்கும் மாற்றங்களை நீங்களே ஏற்படுத்துவது எப்படி? என்று காண்போம்.
சும்மா அறிவுரை சொல்லி குழந்தைகளை அறுத்துக் கொண்டிருக் காமல் சிறு சிறு விளையாட்டுக்கள் மூலம் நாம் சொல்ல வருவதை குழந்தை களுக்கு உணர வைப்பதுதான் வீட்டிலேயே சம்மர் கேம்ப் கட்டுரையின் நோக்கம்.
கொண்டாட்டம் 1 : நம்பிக்கைக்கு டிக்
ஏழே நாளில் குழந்தைகளை உங்களால் எப்படி மாற்ற முடியும்?” என்பார்கள். சம்மர் கேம்ப் மூலம் நாங்கள் மாற்றிய காட்டிய பிறகு, “எத்தனை நாட்களுக்கு இது தொடரும்? என்பார்கள்”அவநம்பிக்கையோடு.
வீட்டில் சின்ன தவறு செய்தால்கூட, “நீ எல்லாம் எத்தனை சம்மர் கேம்ப் கலந்து கொண்டாலும் திருந்தவே மாட்டே” என்பார்கள்.
இப்படி அவநம்பிக்கை யோடு வாழ்ந்து வாழ்ந்து பலருக்கு வாழ்க்கையே அவ நம்பிக்கையாகி விட்டது. எனவே இன்று முதல் உங்கள் குழந்தைகள் நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று போட்டி வையுங்கள். நம்பிக்கையோடு பேசினால் அவருக்கு இரண்டு மார்க் கொடுங்கள்.
அவநம்பிக்கையோடு பேசினால் நான்கு மார்க்கை குறைத்துவிடுங்கள்.
கடைக்கு சென்று ஒன்றை வாங்கச் சொல்கிறீர்கள்? கிளம்பாமலே அது இருக்காது என்று பேசினால் மார்க்கை குறைத்துவிடுங்கள்.
மெல்ல மெல்ல நம்பிக்கையோடு எதையும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நாள் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கையே நம்பிக்கை மிகுந்த வாழ்க்கையாகும்.
கொண்டாட்டம் 2
உங்கள் வீட்டில் எல்லோரும் விடுமுறையில் இருக்கிற நாளில் இந்த விளையாட்டை வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஒரு பலுôன், ஒரு துண்டு பேப்பர், ஒரு பேனா கொடுத்து வட்டமாக உட்கார வையுங்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் விருப்ப உணவு, விருப்ப உடை, பிடித்த நிறம், பொழுதுபோக்கு என அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் அவர்கள் பெயர் எழுதாமல் அந்த துண்டு பேப்பரில் எழுதி ஊதிய பலுôனிற்குள் போட்டு கட்டி விட வேண்டும்.
எல்லா பலுனையும் போட்டு குலுக்கிவிட வேண்டும். பிறகு யாராவது ஒருவர் பலுôனை எடுத்து உடைத்து அதில் உள்ள விருப்பங்களை படித்து அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவராக தொடர வேண்டும். குடும்பத்தில் உள்ள சக உறுப்பினர்கள் விருப்பங் களை கண்டறியும் இந்த விளையாட்டு முடியும் போது நமக்கு உறவு நெருக்கம் இன்னும் கூடி யிருப்பதை உணர முடியும்.
கொண்டாட்டம் 3
இரண்டு இரண்டு பேராக விளையாட வேண்டிய விளையாட்டு இது. ஒருவர் கண்ணை கட்டிவிட வேண்டும். மற்றவர் அவர்களை வார்த்தை இன்றி வழிகாட்ட வேண்டும். ஒரு முறை கைதட்டினால் நடக்கலாம். இரண்டு முறை கை தட்டினால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். வேகமாக கைதட்டினால் நிற்க வேண்டும் என்றெல்லாம் சமிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
பதினைந்து நிமிடம் இப்படி வழிநடத்திய பிறகு கண் கட்டை அவிழ்த்து வழிகாட்டிய வருக்கு கண்ணை கட்டி விட வேண்டும். இவ்வளவு நேரம் கண்ணைக் கட்டிக்கொண்டு இருந்தவர் இனி வழி காட்ட வேண்டும். கணவன் மனைவி இருவரும் சகோதரர்கள் இருவரும் என விளையாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும். நிறைய பேர் கலந்து கொண்டால்தான் இந்த விளையாட்டு சிறப்பாக இருக்கும் என்பதால் பக்கத்து வீட்டுக்காரர் களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.
கொண்டாட்டம் 4
நூலின் இரண்டு முனைகளை சகோதரர்கள் இரண்டு பேர் பிடித்துக்கொள்ள வேண்டும். ஒருவர் அறுத்தால் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்க வேண்டும். மற்றொருவருக்கு அறு படாமல் பார்த்துக்கொண்டால்தான் வெற்றி என்று சொல்ல வேண்டும்.
எப்படியாவது நூலை அறுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் ஓட, அறு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மற்றவர் நூலை தளர்வாக பிடித்துக் கொள்ள வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டே இருப்பார்கள். இந்த விளையாட்டு அவர்களை சிரிக்க வைப்பதுடன், ‘விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. விட்டுக்கொடுப்பவர்களே வெற்றி பெறுபவர்கள்’ என்பதையும் புரிய வைக்கும்.
கொண்டாட்டம் 5
பள்ளி நாட்களிலேயே வீடு அதகளமாகத் தான் இருக்கும். லீவில் கேட்கவும் வேண்டுமா? உங்கள் குழந்தைகளிடம் வீட்டை எப்படி யெல்லாம் டெகரேட் செய்யலாம் என்று யோசிக்கச் சொல்லுங்கள்.
நீங்களும் சில யோசனைகள் கூறுங்கள். கலர் பேப்பரை தொப்பி போல மடித்து அதற்குள் விளக்கு அமைத்து அதை அலங்கார விளக்காக்கலாம். கலர் பேப்பரை கத்தரித்து அதை வைத்து பேப்பர் பூத்தொட்டி செய்யலாம். இப்படி சில யோசனைகளை தெரிவித்து அவர்கள் விருப்பப்படி அவர்களது அறையை அழகு படுத்தும்படி கூறுங்கள். வித்தியாசமாக செய்ப வருக்கு பரிசு என்று அறிவித்து செய்தவருக்கு பரிசையும் வாங்கி தாருங்கள்.
யோசித்தால் நீங்களும் இது போல நூறு கொண்டாட்ங்களை கண்டுபிடிக்கலாம். இப்படி தினம் ஒரு விழா எடுங்கள். தினமும் அழகாகும் இல்லையா வீடு.
குழந்தைகளால் அழகாகட்டும் உங்கள் வீடு.
Balaji
Nice one sir