நேர்காணல்
என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி எனக்கு சொந்த ஊர். மிகவும் ஏழ்மையாக குடும்பம் எங்களுடையது. என் தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அம்மா வீட்டில் உள்ள நான்கு எருது களையும் ஒரு பசு மாட்டையும் பார்த்துக் கொள்வார். அவைதாம் என் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தன என்றுகூட சொல்லலாம். என்னுடைய ஒன்பதாம் வயதில் பால் விற்றுக் கொண்டிருந்தேன்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை கள்ளக் குறிச்சியில் தமிழ்வழிக் கல்வி கற்றேன். பொறியியல் பட்டதாரியான எனக்குள், அந்தக் கல்வி எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எனக்குள் ஏதோ ஒரு தேடல் இருந்தது. அவை என்ன என்பதை அப்போது என்னால் உணர முடியவில்லை. ஆனால் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் என்னால் நிச்சயம் வெல்ல முடியும் என்று திடமாக நம்பினேன்.
இளமையில் உங்கள் முன்னோடி யார்?
என் தந்தைதான் எனக்கு முன்னோடி. அவர்தான் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார். வார இறுதி நாட்களில் என்னை நூலகம் அழைத்துச் செல்வார். அன்று அவர் எனக்குள் விதைத்த அந்த நற் பழக்கம்தான் இன்று புத்தகத்தைப் படித்து, புரிந்து அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்த எனக்கு உதவி யாக இருக்கிறது.
எதிர்பாராத சூழ்நிலைகளை கையாள்வதை அம்மாவிடமும், கலாச்சாரத்தையும் குடும்ப பொறுப்பையும் என் சகோதரி களிடமும் கற்றுக்கொண்டேன்.
என் தாத்தா ராஜு பிள்ளை ஒரு பயணப் பறவை. நாங்கள் மிகவும் கஷ்டப் பட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து பயணம் செய்வார். பர்மா, சிங்கப்பூர், மலேசியா, அந்தமான் என பயணம் நீண்டு கொண்டே இருந்தது. அவர் அடிக்கடி என்னிடம் கூறிவந்தது, ”பயணங்கள் ஒவ்வொரு முறையும் புதிதுபுதிதாக எதையாவது கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அவை விலைமதிப்பில்லாதவை. ஒரு புத்தகம் கற்றுத் தருவதைவிட இது அதிகம்” என்பார். அன்று அவர் கூறிய வார்த்தைகள்தான் இன்று நான் தொடர்ந்து பயணம் செய்வதற்குத் தூண்டுதலாக அமைந்தது.
உங்கள் இளமைக்காலம்…….
என் இளமைக்காலம் பெரும்பாலும் புத்தகங்களுடன் மட்டுமே கழிந்தது. என்னுடைய குழந்தைப்பருவத்தில் புத்தகங்கள்தான் எனக்கு உற்றநண்பர்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் என்பது இனிப்பை சுவைப்பதற்கு இணையானது. மனிதர்களின் பண்பு, எண்ணம், சிந்தனை, மனநிலை என மனிதர்கள் குணநலன்கள் குறித்துப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். இதுதான் என்னுடைய எதிர்காலம் என்று அறியாமலேயே இந்தத் தலைப்புகளை ஒட்டிய புத்தகங்களை தேடித்தேடி படித்திருக்கிறேன்.
புத்தகங்கள் குறித்துப்பேசும்போது எனக்கு ஒரு ஜென் கதை நினைவுக்கு வருகிறது. ”ஒரு யோகிக்கு அபூர்வமான திறமை ஒன்று உண்டு. அவரால் எந்த புத்தகத்தையும் சில நொடிகளில் படிக்க முடியும். அதைக் குறித்து யார் என்ன எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான பதில் எந்த பக்கத்தில் எந்த பத்தியில் உள்ளது என்பது வரை துல்லியமாக நினைவு கூர முடியும்.
இதற்கிடையே அந்த யோகி அவரிடம் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்திருந்தார். இந்த தருணத்தில் யோகி ஒரு முடிவெடுத்தார். அவரிடம் இருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் எரித்து விடுவது என்று.” அத்துடன் அந்தக் கதை முடிவடைந்தது. இந்தக்கதை எனக்குள் பல வழிகளை திறந்தது. புத்தகங்களை வெறுமனே வைத்திருப்பதையும், படிப்பதையும் விட அதன் கருத்தை உள்வாங்குவது தான் மிகவும் முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன். இந்தக் கருத்தின் அடிப்படையில் என்னுடைய புத்தகங் களைத் தேர்வு செய்தேன்.
மனிதர்கள் அனைவரும் அவர் களுக்கு வெளியே எதை எதையோ தேடிக் கொண்டிருக்க, வாசிப்புத்தான் மனிதர்களுக்குள் என்ன இருக்கிறது என்று தேடக் காரணமாய் அமைந்தது. மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்தான் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனித் தன்மை உண்டு என்பதை உணர முடிந்தது.
நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. அங்கு மாதம் 30 ரூபாய் சம்பளம். அது தவிர என் தந்தைக்கு உதவியாக அவர் கடையிலும் பணிபுரிந்துள்ளேன். ஆனால் நான் எங்கு என்ன வேலை செய்தாலும், என் மனம் விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கும் என்று.
நீங்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்க பின்புலமாக இருந்த சம்பவம்….
அது ஒரு சுவையான சம்பவம். ஒரு முறை நான் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கெதிரே அமர்ந்திருந்த ஒருவர் எதேச்சையாக பேச்சைத் துவக்கினார். நானும் பேச ஆரம்பித்தேன். எங்கள் உரையாடல் 45 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. எங்கள் உரையாடலின் முடிவில் அந்த நபர் எனக்களித்த பின்னூட்டம், ”உங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் என்னுடைய சிந்தனை மாறுபட்டு இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சி யுடன் இருக்கிறேன். எனக்குள் இருக்கும் திறமையை எனக்கே அடையாளம் காட்டக்கூடிய திறமை உங்களிடம் இருக்கிறது.
நீங்கள் பொறியியல் பட்டதாரி என்றாலும் ஒரு பயிற்சியாளராக இருக்கலாமே” என்று சொல்லிச் சென்றார். பல புதிய சிந்தனைகளுடன் செல்கிறேன் என்று அவர் கூறியதைப்போல், எனக்கும் நீண்ட காலமாய் இருந்து வந்த தேடலுக்கான விடையை அவர் கூறிய பின்னூட்டத்தின் வழிதான் கண்டு கொள்ள முடிந்தது.
உங்கள் ”ஹ்ர்ன்ண்ய்ஹ்ர்ன்.ஸ்ரீர்.ண்ய்” என்ற கருத்தாக்கம் உருவாக என்ன காரணம்?
மனிதர்களிடையே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் திறன்கள் ஏராளம். பட்ஹற் நட்ர்ன்ப்க் ஆங் ற்ஹல்ல்ங்க், ஹப்ண்ஞ்ய்ங்க், ன்ய்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க், ஞ்ன்ண்க்ங்க் ஹய்க் ங்ஷ்ல்ப்ர்ழ்ங்க். இந்த திறன்கள் அனைத்தும் நமக்குள் கண்ணுக்குத் தெரியாத மனிதர்களைப் போல் வாழ்ந்து கொண்டிக்கின்றன. அந்த கண்ணுக்குத் தெரியாத மனிதர்களோடு தான் நான் செயல்பட விரும்பு கிறேன். இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டி ருக்கையில் தான் எனக்குள் மின்னல் போல் தோன்றிய வார்த்தை ”ஹ்ர்ன் ண்ய் ஹ்ர்ன்.ஸ்ரீர்.ண்ய்”. இது என் கருத்தாக்கத்திற்குப் பொருத்தமாகவும் இருந்தது.
சென்னையைச் சேர்ந்த திரு.கணேஷ் பார்த்தசாரதி எங்கள் வலை தளத்தை வடிவமைத்து தந்தார். எங்கள் “ஹ்ர்ன்ண்ய்ஹ்ர்ன்.ஸ்ரீர்.ண்ய்” கர்ஞ்ர் பார்த்தால், இரண்டு மனிதர்களை ஒரு தீ ஜுவாலை இணைப்பது போல் வடிவமைக்கப் பட்டிருக்கும். அதில் ஒரு மனிதன் நம் வெளித் தோற்றத்தின் குறியீடு. மற்றொரு மனிதன் நம் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே பொதிந்திருக்கும் மற்றொரு மனிதனின் குறியீடு. என்னுடைய வேலை அந்த கண்ணுக்குத் தெரியாத மனிதனை வெளிக்கொணர்வதற்குத் தூண்டுதலாய் இருப்பது.
தனிமனிதன் தன்னுடைய பண்பு களையும், தலைமைப்பண்பையும் வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
வளர்த்துக் கொள்ளவேண்டாம். புரிந்து கொண்டால் போதும். நமக்குள் ஏதோ ஒரு தனித் தன்மை இருக்கிறது என்கிற புரிதலே தலைமைப் பண்புக்கு காரணம். தலைவர்களாய் இருக்கிறவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் பெரும்பாலானவர் களிடம் உண்டு. இது ஓரளவுக்கு உண்மையே தவிர இது மட்டும் உண்மையல்ல. காரணம் அனைவரும் தலைவர்கள் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள்தான்.
உயிர் வாழ்தல் என்பது நம் அடிப்படைக் குண நலன். இது இல்லாமல் போனால் மனிதர்கள் இறக்க நேரிடும். வாழ்வதற்கான திறன் இருப்பதால் இத்தனை காலமும் நம்மால் உயிருடன் வாழ முடிகிறது. ஆக நம்மிடம் ஏதோ ஒரு திறன் இருப்பது உறுதியாகிறது. உதாரணமாக உங்கள் முன்னால் ஒரு சிங்கம் வருவதாக வைத்துக் கொண்டால் அதனிடமிருந்து தப்பி உயிர் வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அத்தனை வித்தைகளும், திறமைளும் தலைமைப் பண்புக்கான குணநலன்கள் தான்.
நம் வாழ்வில் எதிர்கொள்கிற அத்தனை சூழல்களும் சிங்கத்திற்கு சமமானவை தான்.
நம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்துமே தலைமைப்பண்புகள்தான் என்பதை நாம் ஏனோ உணர்வதில்லை. புதிய பண்புகளை வளர்த்துக் கொள்வதைவிடவும் நம்மிடம் இருப்பதின் மதிப்பினை புரிந்து கொள்ள வேண்டும்.
பல சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் இயங்குகின்ற வேளையில் உங்கள் தனித் தன்மை என்ன?
பெரும்பாலான வகுப்புகள் என்ன நடத்த வேண்டும் என்ற முன்னேற்பாடுகளுடன் தான் துவங்குவார்கள். நான் அதை ஒரு போதும் செய்வதில்லை. நான் பயிற்சி எடுத்துக் கொண்ட சகட (சங்ன்ழ்ர் கண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீ டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ண்ய்ஞ்) எனக்கு அதைக் கற்றுத் தந்திருக்கிறது. என்ன தெரியுமா? எப்போதும் அரங்கில் நுழைவதற்கு முன் தெளிந்த மனத்துடன் செல்ல வேண்டும்.
பங்கேற்பாளர்களின் சிந்தனையையும் அவர்கள் நடை முறையையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். சிந்திப்பதும், சிந்தித்த வற்றை நடைமுறைப் படுத்துவதும் தான் மனிதர்களின் கோட்பாடு. நான் அவர்களின் சிந்தனையில் விழிப்புணர் வையும், புரிதலையும் ஏற்படுத்துகிறேன். இது வியப்பூட்டும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. என்னை அணுகுகிற நிறுவனங்கள், சிறந்த பயனை எதிர்பார்த்து அவர்களுடைய பணியாளர்களை என்னிடம் ஒப்படைக்கிறார்கள்.
நான் ஒரு பயிற்சி வகுப்புக்கு 25 பேருக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. பயிற்சி நான்கு நாட்கள் நடக்கும். நான் அவர்களிடம் அவர்களுடைய நடைமுறை களையும் அணுகு முறைகளையும் கற்றுக் கொள்கிறேன். அவர்கள் அணுகு முறையிலேயே பல சிறப்புகள் இருக்கும். அந்தப் புரிதலையும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்படுத்துவேன். நான்காம்நாள் இறுதியில் அந்த அரங்கில் நடைபெற்ற பயிற்சிலும் அவர்கள் அணுகு முறையிலும் நான் நேரடியாக கண்டு கொண்டவைகளை அவர்களுக்கு பின்னூட்டமாக வழங்குவேன். முப்பது நாட்கள் கழித்து அவர் களுடன் மீண்டும் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டு அதன் மூலம் நிறுவனங்கள் எதிர்பார்த்த பயனை கொடுக்க முடிந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
எந்தத் தலைப்பிலும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும் வெகுசுலபம். ஆனால் அதை எதிர்பார்த்த பயன்களுடன் வெற்றிகரமாக மாற்றுவதில்தான் நம் திறமை இருக்கிறது. எனக்கு பயிற்சி வகுப்புகளை எப்படி கையாளப் போகிறேன் என்று தெரியாது. ஆனால் அதன் வெளிப்பாடு நிச்சயம் பிரம்மிக்கத்தக்காய் இருக்கும்!
ஒரு சிந்தனை உருவாகி நடைமுறைக்கு வரும்முன் நிறுவனத்தின் பல்வேறு படிநிலை களைக் கடக்கும் முன் வலுவிழக்கிறது. நிறுவனங்களில் இந்த தகவல் இடைவெளியை எப்படித் தவிர்ப்பது?
இந்தக் கேள்வி என் பயிற்சி வகுப்புகளில் நான் மேற்கொள்ளும் பயிற்சி ஒன்றை நினைவூட்டுகிறது. நான் முதலில் ஒரு பனிக்கட்டியை 25பேர் அடங்கிய பங்கேற்பாளர்களில் கூட்டத்தில் முதலாமவரிடம் கொடுப்பேன். அப்படியே சுழற்சி முறையில் என் கையில் வந்து சேர்க்கச் சொல்வேன். ஏறத்தாழ அது நீர்த்துளியாகத் தான் வந்து சேரும். பின்பு ஒரு இரும்பைக் கொடுப்பேன். அது எந்த மாற்றமும் இன்றி வந்து சேரும். மூன்றாவதாக ஒரு பூவைக் கொடுப்பேன். அது சில நேரம் கசங்கியிருக்கும். அல்லது ஓரளவு கொடுத்ததைப் போலவே வந்து சேரும். பின்னர், எரியும் மெழுகு வர்த்தியைக் கொடுப்பேன். அதை பங்கேற்பாளர்கள் அணையாமல் பாதுகாத்து என்னிடம் தருவார்கள்.
இந்த பயிற்சியின் இறுதியில் கற்றுக் கொண்டது என்ன என்று பங்கேற்பாளர்களை கேட்டால், நிறுவனங்கள் ஒரு தகவலைப் பரிமாறும்போது அதை பனிக்கட்டிபோல் கொடுத்தால் இறுதிநிலையில் அவை கரைந்து போகும். இரும்பு போல் இருக்கும் பட்சத்தில், பணியாளர்கள் எந்த விருப்பு வெறுப்பு இன்றி கடமைக்காக செயல்படக்கூடும். பூவைப்போல் இருந்தால் பணியாளர்களின் எந்தத்திறனும் வெளிப்படுத்தத் தேவையில்லை. அதை அப்படியே செய்து முடிக்கலாம். ஆனால் எரியும் மெழுகைப் போல் இருக்குமேயானால் பணியாளர்களும் அதை அணையாமல் பார்த்துக்கொள்ள அக்கறை, அவர்களுக்குத் தெரிந்த உத்திகள் என அனைத்தையும் மேற்கொண்டு இறுதி படிநிலை வரை சிறப்பாக செயல்படமுடியும்.
நீங்கள் சந்தித்த சவால்களும் அவற்றை எதிர்கொண்ட அனுபவங்களும்…….
நான் இந்தத் துறைக்கு வந்த புதிதில் என் முதல் பயிற்சி வகுப்பிற்கான வாய்ப்பு அகமதா பாத்தில் கிடைத்தது. ஆனால் என் புகைப்படத்தையும் சுயவிவரக் குறிப்பையும் பார்த்த அவர்கள் மிகவும் சிறியவராக இருக்கிறார். என்ன பயிற்சியளிக்கப் போகிறார் என்று நம்பிக்கை அற்று இருந்தார்கள். எனக்கு வாய்ப்பு இல்லை என்பதை வெளிப்படையாக கூறாமல் ரயில் டிக்கெட் எடுத்து அனுப்பி இருந்தார்கள்.
ஆனால் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 350க்கும் மேல் இருந்தது. ஆனால், இது என் முதல் வாய்ப்பு, இதை நழுவ விடக்கூடாது என்ற முனைப்பில் எனக்கு பயணச் சீட்டு இல்லாத போதும், அந்த வண்டியின் டிடிஆரிடம் அனுமதிபெற்று இரண்டு கம்பார்ட்மெண்ட்டுக்கும் இடையே அமர்ந்து செல்ல அனுமதி வாங்கிக்கொண்டேன். நான்கைந்து நாளிதழ்களை வாங்கி தரையில் விரித்து கொண்டு போர்த்திக் கொண்டும் மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்தேன்.
நான் பயிற்சியளிக்க வேண்டிய அரங்கில் நுழைந்தவுடனே அவர்கள் கேட்ட கேள்வி பயிற்சியாளர் வரவில்லையா என்பதுதான். இறுதியில் நான்தான் பயிற்சியாளர் என்பதைக் கண்டு கொண்டார்கள். பயிற்சி துவங்கிய இரண்டு நாட்களில் விழா ஏற்பாட்டாளர்கள், உங்களை காண நிறுவனத்தின் இயக்குநர் வருகிறார் என்றார்கள்.
இயக்குநர் வருகிறார் என்றால் பயிற்சி வெற்றிகரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணினேன். எண்ணியது போலவே, மூன்று நாள் வகுப்பை ஆறு நாட்களுக்கு நீட்டித்தனர். அதுபோக எனக்கு தருவதாக ஒப்பந்தம் ஆகியிருந்த பணத்தைக் காட்டிலும் இருமடங்கு தருவதாக அதிகம் தர முன்வந்தனர். நான் மறுத்து விட்டேன்.
ஆனால் அவர்கள் விடாமல் என் கையில் ஒரு கவரை கொடுத்து விட்டுப்போனார்கள். அதில் நான் ஊர் திரும்புவதற் கான விமான டிக்கெட் இருந்தது.
விமானத்தில் பறக்கையில் கீழே எங்கோ போய்க்கொண்டிருந்த இரயிலைக் காணமுடிந்தது. அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம், எத்தனை சவால்கள், சிரமங்கள் வழி மறித்தாலும் இலக்கை நோக்கிய பயணத்தை தொடர்பவர்களுக்கு நிச்சயம் ஒரு விமான டிக்கெட் காத்திருக்கும்.
உங்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர் யார்? ஏன்?
அனைவருமே! என்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தி யவர்கள்தான். குறிப்பாக எனக்கு பயிற்சியளித்த சூ ஸ்பென்சர் நைட் என்பவர் எனக்கு இந்த பண்பை கற்றுக் கொடுத்தார். அவர்தான் பயிற்சியாளர் களும் சாதாரண மனிதர்கள்தான் என்றதெளிவை எனக்குள் விதைத்தார்.
உங்கள் இலட்சியம் என்ன?
ஒவ்வொரு நாளும் என்னுடைய செயல்திறனின் உச்சத்தை அடைந்த ஒரு நிறைவுடன் உறங்க வேண்டும். எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு யோகி நெடுந்தூரம் நீந்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையே நீந்த வேண்டும் என்று அவர் எடுத்த முடிவை பலரும் கேலி பேசினார்கள். முடியாது என்று ஏளனம் செய்தார்கள். யோகி எதையும் பொருட்படுத்தாது நீந்தத் தொடங்கினார்.
பல நாட்கள் கழித்து பல தடைகளைத் தாண்டி அவர் இலக்கை அவர் சென்றடைந்தார். அப்போது கேலி பேசிய அனைவரும் பூச் செண்டுகளுடன் வாழ்த்திக் கொண்டிருந்தனர். அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.
மீண்டும் அவருடைய அடுத்த இலக்கை நோக்கி நீந்தத் தொடங்கினார். அத்துடன் கதை நிறைவடைந்தது.
M.J. SYED ABDULRAHMAN
Sorry what’s this பட்ஹற் நட்ர்ன்ப்க் ஆங் ற்ஹல்ல்ங்க், ஹப்ண்ஞ்ய்ங்க், ன்ய்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க், ஞ்ன்ண்க்ங்க் ஹய்க் ங்ஷ்ல்ப்ர்ழ்ங்க்.“ஹ்ர்ன்ண்ய்ஹ்ர்ன்.ஸ்ரீர்.ண்ய்” (சங்ன்ழ்ர் கண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீ டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ண்ய்ஞ்) which font is this please let me know
Thank you
M.J. SYED ABDULRAHMAN