சந்தைப் படுத்துவோம்… சாதனை குவிப்போம்!

– தி.க. சந்திரசேகரன்

தொடர் 17

பொருளின் தேவை அதிகமாகவும், அதற்கேற்ப உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்கும்போது நிச்சயமாக அப்பொருளினைப் பரவலாக சந்தைப்படுத்த இடைமனிதர்கள் தேவை. அவர்களுக்குப் பல பெயர்கள் தரலாம். தரகர்கள் (ஆழ்ர்ந்ங்ழ்ள்) கமிஷன் ஏஜெண்டுகள், ஏகபோக விற்பனை ஏஜெண்டுகள் என்றெல்லாம் இடைநிலை மக்கள் இருக்கிறார்கள். இடையில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்போது, விற்பனை செய்வோரும் பல நிலையில், பல பெயர்களுடன் பவனி வருகிறார்கள்.


மொத்த பரவலாக்குபவர் (நர்ப்ங் ஈண்ள்ற்ழ்ண்க்ஷன்ற்ர்ழ்)
உற்பத்தியாளர்கள், பொருளை உற்பத்தி செய்வதோடு நிறுத்திக்கொள்வர். அதன்பின்னர் மொத்த பரவலாக்குபவர்கள் அப்பொருளின் விலை நிர்ணயம் செய்தல், பொருளை வடிவமைத்தல், விற்கும் ஊர்களைத் தீர்மானம் செய்தல், பொருள்களைக் கொண்டுபோய் உரிய இடத்தில் சேர்த்தல், விளம்பரம் செய்தல், இப்படி பலதரப்பட்ட வேலைகளை மேற்கொள்ளுவார்கள்.
இந்த பரவலாக்குபவர்கள் நிறைய பணம் செலவு செய்யக் கூடியவர்களாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் மிகப்பெரும் பகுதியை இவர்களுக்குக் கொடுத்தால்தான் உரிய பலன் கிடைக்கும்.
இதில் உற்பத்தியாளர்களின் கவனமெல்லாம் உற்பத்தியிலேயே நிற்பதால் அவர்கள் தரமான பொருளை, அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். தேவையற்ற மன உளைச்சல் இருக்காது. ஆனாலும் சில குறைபாடுகள் உள்ளன. ஒருவேளை பரவலாக்குபவர் திறமையான மனிதராக இல்லாமலிருந்தால் அவரை நினைத்த வேகத்தில் அப்புறப்படுத்த முடியாது. காரணம் அவர் ஏற்கெனவே நிறைய முதலீடுகள் செய்து வைத்திருப்பார்.

அதுமட்டுமல்ல, ஒரு பரவலாக்குபவர் ஒரே மாதிரியான இரு பொருள்களைப் பரவலாக்குபவராக இருந்தால் சிக்கல்தான். எடுத்துக்காட்டாக, உங்களுடைய பொருள் ‘அணில் சோப்’ என்று வைத்துக் கொள்வோம். அவர் ‘அணில் சோப்’பை மட்டும் எல்லா இடங்களுக்கும் அனுப்பினால் நல்லது. ஆனால், அவரே ‘முயல் சோப்’பிற்கும் பரவலாக்குபவர் என்றால் அவர் எந்த நேரத்தில் எதற்கு முன்னுரிமை தருவார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.அதனால் நம்முடைய பொருளை மட்டுமே பரவலாக்குபவராக இருந்தால் நல்லது. இல்லையென்றால் மன உளைச்சலே!
உரிமம் பெற்றவர் (ஊழ்ஹய்ஸ்ரீட்ண்ள்ங்ழ்)

ஒரு பொருளை உற்பத்தி செய்து, முழுமையாக வேறு ஒருவரிடம் பரவலாக்கும் பொருப்பினை அளிக்காமல், ஆங்காங்கே சிலபேருக்கு உரிமம் தரலாம். அவர்களைத் தவிர வேறுயாரும் பெரிய அளவில் விற்க முடியாது!

மிகவும் சிறப்பான பொருள்களை, சிறப்பான சில அங்காடிகளில் விற்க இது ஏற்ற முறையாகும்.
இருப்பாளர் (நற்ர்ஸ்ரீந்ண்ள்ற்)

ஆங்காங்கே இருப்பாளர்களை நியமித்து, பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அங்கிருந்துதான் எல்லா நிறுவனங்களுக்கும் பொருள்கள் செல்லும். மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் எனப் பலரும் இங்கே வந்து இருப்பாளரிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். இருப்பாளருக்கு, இருப்பு வைத்துக் கொள்ளுவதற்கென சில சதவீதமும், விற்பனையாகும் அளவிற்கேற்ற சதவீதமும் பணம் கொடுப்பார்கள்.

இதனால் பல நன்மைகள். பரவலான இருப்பு மையங்கள் இருக்கும்போது, வாடிக்கையாளருக்குப் பொருள்கள் உரிய நேரத்தில் விரைவாகச் செல்லும். உற்பத்தியாகும் இடத்தில் பொருள் தங்குவதில்லை. சேமிக்கப் பயன்படும் களஞ்சியம் பெரியதாக இருக்க வேண்டியதில்லை.
சில்லறை விற்பனை நிலையங்கள்

சந்தைப்படுத்தப்படும் பொருள் பல்வேறு வகையான விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

1. பொது மளிகைக் கடைகள்

2. வரையறுக்கப்பட்ட வணிக நிலையங்கள்.
– துணிக்கடைகள், மருந்துக்கடைகள், உரக்கடைகள், விதைக்கடைகள் போன்றவை.

3. பிரத்தியேகமான கடைகள்
– காலணிக் கடைகள், நகைக்கடைகள் போன்றவை.

4. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்
– 50 அல்லது 60 வகையான பல்வேறு தரப்பட்ட கடைகளை ஒரு கட்டத்தில் அடுக்குதல்

5. சூப்பர் மார்க்கெட்
– மிக விசாலமான கடைகள், பெரும்பாலும் விற்பனையாளர்கள் இல்லாமல், வாடிக்கையாளரே பொருட்களைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட இடத்தில் கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லும் வசதி கொண்டவை.

6. அஞ்சல் வழியாக விற்றல்.
– தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து தொலைபேசி மூலம் (அ) அஞ்சல் மூலம் பொருளைக் கேட்டுப் பணம் கொடுத்துப் பெறல்.

7. இயந்திரங்கள் மூலம் விற்றல்.
– பணம் போட்டால் பொருள் தரும் கருவிகள் மூலம் விற்றல் – குளிர்பானங்கள் போன்றவற்றை இரயில் நிலையங்களில், திரையரங்குகளில் விற்பதைக் காணலாம்.

இப்படி பல்வேறு மனிதர்கள் மூலமாக, பல்வேறு நிலையங்களில் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. சந்தைப்படுத்தும் முயற்சியின் மொத்த அடிப்படையும் இங்கே வந்து சேர்ந்துவிடுகின்றன.

நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளைப் பொருத்து, அதன் தேவைகளைப் பொருத்து, உங்கள் உற்பத்தியின் அளவைப் பொருத்து, அது எந்த இடங்களில் விற்பனையாக வேண்டும் என்பதையும் பொருத்தே மேற்கண்ட செய்திகள் உங்களுக்குப் பயன்படும். இவற்றை அடிப்படையாக வைத்தே ‘சந்தைப்படுத்தும் சங்கிலி (ஙஹழ்ந்ங்ற் ஸ்ரீட்ஹண்ய்) யின் நீளம் தீர்மானிக்கப்படுகின்றது.
சங்கிலியின் நீளம்தான் செலவு, முயற்சி, வருவாய் இவற்றையும் தீர்மானிக்கின்றது. சந்தைப் படுத்தும் சங்கிலியின் நீளம் மிக அடிப்படையில் பொருளின் தன்மையை ஆதாரமாகக் கொண்டது. சந்தைப்படுத்தும் சங்கிலியின் தன்மையை அடுத்த இதழில் காணலாம்!

(வளரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *